உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 யத்துக்கோ அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கோ விண்ணப்பித்துக் கொள்ளலாம். அந்த விண்ணப்பம் வந்து சேர்ந்தபிறகு, அடுத்துக்கூடும் சபையிலே அவரை அங்கத் தின்ராக மீண்டும் சேர்த்துக் கொள்ளலாம்; எனினும், ஓர் அங்கத்தினரை அவருடைய பதவிக் காலத்தில் இரண்டு முறைதான் அவ்வாறு சேர்த்துக் கொள்ளலாம். 27.A. அங்கத்தினர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய பதவிப் பிரமாணம் அல்லது உறுதிமொழி. - 1873-ம் வருஷத்திய இந்தியப் பிரமாணச் சட்டத் ẶCentral Act X of 1873] &#sò Jo-su?(HỨL16.jpgÓföG LIT:535th அன்னில்,தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர் அல்லது கூட்டு அங்கத்தினராக நியமித்துக் கொள்ளப்பட்ட அங்கத்தினர் அல்லது அங்கத்தினராக ஆனவர், ஒவ்வொருவரும் தங்கள் ஸ்தானத்தில் அமர்வதற்கு முன்பு பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் கூட்டத்தில், கீழ்க்கண்ட படி பிரமானம் அல்லது உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். நான், அ, ஆ; அங்கத்தினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால் (அல்லது) கூட்டு அங்கத்தினராகி நியமிக்கப்பட்டிருப்பதால்; பஞ்சாயத்து (அல்லது) பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில், அங்கத்தினராகி விட்டதால், கடவுள் பெயரால் சத்தியம் செய்கிறேன் (அல்லது) மனப்பூர்வமாக உறுதி கூறுகிறேன். சட்டபூர்வமாக அமைக்கப்பட்டிருக்கும் இந்திய அரசி யல் அமைப்புச் சட்டத்தின்மீது முழு நம்பிக்கையும் விசுவாச மும் கொண்டு உறுதி அளிப்பதோடு, இந்திய ஆட்சியையும் கெளரவத்தையும் உண்மையாக மதித்து, நான் ஈடுபடும் கடமையை நேர்மையாக நிறைவேற்றுவேன்’ என்றும், a (2) யாராவது ஒரு நபர் அங்கத்தினராக தேர்ந்தெடுக் கப்படடால், அல்லது கூட்டு அங்கத்தினராக நியமிக்கப் பட்டால் அல்லது அங்கத்தினராகிவிட்டால் பதவிக் காலம்