உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#40 (2) பஞ்சாயத்துக்கும் அரசாங்கத்துக்குமிடையே நடை பெறும் எந்த அலுவல் கடிதத் தொடர்பும் தலைவர் மூலமாகவே நடைபெற வேண்டும். நிர்வாக அதிகாரி, அரசாங்கத்துக்கு அனுப்பும் தகவல்களே தலைவர் மூலமாகவும், அரசாங்கம் நிர்வாக அதிகாரிக்கு அனுப்பும் தகவல்களே தலைவர் மூலமாக வும் அனுப்ப வேண்டும். 84. தலைவருடைய அலுவல்களே மற்ருெருவர் செய்தல். அதைப் பிரித்துக் கொடுத்தல்-தலைவர் பதவி காலியாகும் போது அதைப் பூர்த்தி செய்தல் (1) தலைவர் பதவி காலியால்ை அந்தப் பதவிக்குப் புதிதாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர் அந்தப் பதவி ஏற்கும்வரை, தலைவர் செய்ய வேண்டிய காரியங்கள்ே எல்லாம் துணைத் தலைவரே செய்வார். (2) தலைவர் தொடர்ந்து முப்பது நாட்களுக்கு மேல் தமது அதிகார எல்லேக்குள் இல்லாமல் போலுைம், தமது வேலேயைச் செய்யும் சக்தியின்றி இருந்தாலும், குறிப்பிடப் பட்ட சில சந்தர்ப்பங்களில் அன்றி மற்ற சந்தர்ப்பங்களில் தலைவரின் அலுவல்கள் எல்லாம் துணேத்தலைவரைச் சேரும். (3) தலைவர் பதவி காலியாக இருந்தாலோ அல்லது தலைவர் தமது அதிகார எல்லேக்குள் முப்பது நாட்களுக்கு மேல் தொடர்ந்து இல்லாமல் போேைலா அல்லது தமது அலுவல்களேச் செய்யும் சக்தியற்றிருந்தாலோ அதே சமயத் தில் துணேத் தலைவர் பதவியும் காலியாக இருந்தாலோ அல் லது துணைத் தலேவர் தொடர்ந்து முப்பது நாட்களுக்கு மேல் அதிகார எல்லேக்குள் இல்லாமல் போனுலோ அல்லது செயல் புரிய சக்தியற்று இருந்தாலோ, இன்ஸ்பெக்டர், மேற்படி பஞ்சாயத்து அங்கத்தினர் ஒருவரிடம் இப்பொறுப்பை ஒப்பு விக்கலாம். பஞ்சாயத்து அங்கத்தினர் எவருமே இப் பொறுப்பை ஏற்க கிடைக்காமல் போனல், இதன் பொருட்டு இன்ஸ்பெக்டரே யாரையாவது ஒருவரை நியமிக்கலாம். அவ்வாறு நியமிக்கப்பெற்றவர் பஞ்சாயத்து அங்கத்தின ராயிருப்பினும் அல்லது வேறு எவராயிருப்பினும் சரி, அவர் "தற்காலிகத் தலைவர் என்று அழைக்கப்படுவார். புதுத் தலைவர் அல்லது துணேத் தலைவர் ஒருவர் தேர்ந்தெடுக்கப் பட்டு, அவர் பதவி ஏற்கும் வரையிலோ அல்லது தலைவரோ அல்லது துனேத் தலைவரோ ஊருக்குத் திரும்பி வருகிறவரை யிலோ அல்லது செயல்புரியும் சக்தி பெறும் வரையிலோ