பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

145 (i) இந்த உட்பிரிவின் கீழ் வழங்கும் அதிகாரமானது பஞசாயத்து யூனியன் கவுன்ஸிலின் விசேஷ அனுமதி இல்லாமல், ஒரு வருஷத்தில் மொத்தத்தில் 90 நாட்களுக்கு மேல் போகக்கூடாது. (iii) இந்த உட்பிரிவின்படி செய்யப்படும் ஒவ்வொரு உத்தரவும் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுடைய அடுத்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட வேண்டும், (7) இந்தப்பிரிவின்கீழ் அதிகாரம் வழங்கப்பட்ட பொறுப்புகளேயும் அலுவல்களேயும் தலைவரால் குறிப்பிடப் படும் நிபந்தனேகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் வரையறை களுக்கும் உட்பட்டு செயலாற்ற வேண்டும். அங்கத்தினர்கள் 88. அங்கத்தினர்களுடைய சுயேச்சையான உரிமைகள் (1) எந்த ஒரு அங்கத்தினரும், பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் வேலைகளில் ஏதேனும் அசிரத்தை காணப்பட்டால் அதை நிர்வாக அதிகாரி அல்லது கமிஷ னருடைய கவனத்துக்குக் கொண்டு வரலாம். பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுவது பற்றியும், வட்டார தேவைகளேப் பற்றியும், விரும் பத்தக்கவை எனத் தோன்றும் அபிவிருத்திகளைப் பற்றியும் தெரியப்படுத்தலாம். (2) நிர்ணயிக்கப்படும் விதிகளுக்கு உட்பட்டு ஒவ்வொரு அங்கத்தினருக்கும் தீர்மானங்கள் கொண்டு வரவும், பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் நிர்வாகம் குறித்து தலேவரை அல்லது சேர்மனே கேள்வி கேட்கவும் உரிமை உண்டு. (3) நிர்வாக அதிகாரி அல்லது கமிஷனருக்கு முறைப் படி நோட்டீஸ் கொடுத்த பிறகு, பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் சம்பந்தப்பட்ட தஸ்தா வேஜுகளே, ஆபீஸ் திறந்திருக்கும் நேரத்தில் பார்வையிட லாம். ஆல்ை, தகுந்த காரணங்கள் ஏதேனும் இருந்தால், நிர்வாக அதிகாரி அல்லது கமிஷனர் எழுத்து மூலம் அதைத் தெரிவித்து அங்கத்தினர் பார்வையிடுவதை தடுக்கலாம். HH-10