#50 யூனியன் கவுன்ஸிலுக்கு விசேஷமாக் ஒப்படைக்கப்பட்ட திட்டத்துக்கு கவுன்ஸில் இடும் கட்டளேக்ள் எவையேனும் தொடர்பு உடையனவாக இருந்தால், அந்தக் கட்டளைகளே அவ்வாறு ஒப்படைக்க குறிக்கப்பட்டுள்ள நிபந்தனேகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் ஒத்திருக்க வேண்டும். (8) அரசாங்கம் அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் விதிக்கப்படும் கட்டளைகளுக்கும் வரையறை களுக்கும் உட்பட்டு, கமிஷனர் எழுத்து மூலமான தம் முடைய உத்தரவினால், தமக்கு உள்ள அலுவல்களில் எதை யேனும், பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலின் எந்த அதிகாரி யிடமாவது ஊழியரிடமாவது அல்லது அரசாங்கத்தின் எந்த ஊழியரிடமாவது ஒப்புவிக்கலாம். அவை, கமிஷனரால் செய்யப்படும் வரையறைகள், வரம்புகள், கட்டுப்பாடுகளுக்கு உட்படுவதோடு அவருடைய மேற்பார்வைக்கும் மாற்று தலுக்கும் உட்படுவதாகும். - 43. கமிஷனருக்கும் நிர்வாக அதிகாரிக்கும் அவசரகால அதிகாரங்கள் ஒரு வேலேயை நிறைவேற்றுவதற்கோ அல்லது ஒரு செயலேச் செய்வதற்கோ, பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அனுமதி பெற வேண்டியிருப்பினும் அவசர சந்தர்ப்பங்களில் அவற்றை உடனே நிறைவேற்று வது பொதுமக்களின் சுகாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும் அவசியம் என்று சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரி அல்லது கமிஷனர் கருதினுல், அவ்வாறன காரியங்களே நிறை வேற்றும்படி கட்டளேயிடலாம். மேலும், மேற்படி காரியங் களுக்கு உண்டான செலவை, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் நிதியிலிருந்து கொடுக்கும்படி கட்டளையிடலாம். ஆளுல (a) குறிப்பிட்ட ஒரு வேலையை அல்லது செயலே செய்யக் கூடாதென்று பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனிய்ன் கவுன்சில் செய்திருக்கும் முடிவுக்கு விரோதமாக, இந்தப் பிரிவின்கீழ் ஒன்றும் செய்யக்கூடாது. (b) இந்தப் பிரிவின்கீழ் நடத்தப்பட்ட செயலே, அதற்கு உரிய காரணங்களுடன் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலின் அடுத்த கூட்டத்திலேயே அறிவிக்க வேண்டும்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/341
Appearance