$5; நடை முறை 48. பஞ்சாயத்து கூட்டங்களில் தலைமை வகித்தல் (1) பஞ்சாயத்தின் ஒவ்வொரு கூட்டத்துக்கும் அதன் தலைவரே தலைமை வகிக்க வேண்டும். அவர் வராமல் போனுல் துணேத் தலைவர் தலைமை வகிக்க வேண்டும். அவர்கள் இருவருமே வராமல்போல்ை, கூட்டத்துக்கு வந் திருக்கும் அங்கத்தினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் தலேமை வகித்து நடத்த வேண்டும். (2) கூட்டத்திலே ஒழுங்கு தவறு நேராதபடி பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், கூட்டங்களில் அல்லது அவற்றின் சம்பந்தமாக ஏற்படும் ஒழுங்குப் பிரச்ன யைப்பற்றியும் அவர் தீர்மானிக்க வேண்டும். ஒழுங்குப் பிரச்னை குறித்து எவ்வித விவாதமும் கூடாது. ஒழுங்குப் பிரச்னை குறித்து தலைவர் அளிக்கும் தீர்ப்பே முடிவானது. (3) குறிப்பிட்ட ஒரு சமயத்தில் கூட்டத்துக்கு தலேமை வகிக்கும் துணைத் தலைவர் அல்லது அங்கத்தினராயினும் கூட்டத்திலே அவர் தலேமை வகிக்கும்வரை தலைவருக்கு உள்ள எல்லா அதிகாரங்களும் அவருக்கு உண்டு. 47. பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் கூட்டங்கள் (1) ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலும் குறிப்பிடும் காலங்களிலும் இடங்களிலும் கூடுவதோடு (2) உட்பிரிவின் ஏற்பாடுகளுக்கு உட்பட்டு, கூட்டங்களின் அலுவல்கள் சம்பந்தமான விதிகளேயும் (கோரம் உள்பட) கடைப்பிடிக்க வேண்டும். எனினும், பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலின் இரண்டு கூட்டங்களுக்கு மத்தியிலே அறுபது நாட்களுக்குமேல் கழிந் திருக்கக்கூடாது. (2) பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் ஒவ்வொரு கூட்டத்துக்கும் அதனுடைய தலைவர் தலைமை வகித்து நடத்த வேண்டும். அவர் இல்லாதபோது துணேத் தலைவ ராலும், இருவருமே இல்லாதபோது, கூட்டத்துக்கு வந் திருக்கும் அங்கத்தினர்கள், அந்தச் சமயத்தில் தேர்ந்தெடுக் கப்படும் அங்கத்தினர் ஒருவரால் தலைமை வகிக்கப்பட வேண்டும்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/342
Appearance