உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#60 (ii) எந்த நிபந்தனைகளின்மீது அத்தகைய அலவன்ஸ்கள் வழங்கப்படும் அல்லது ஏதாவது லீவு, முதுமையால் இயலாமை, அல்லது ஒய்வு பெறுதல் அதே போல அனுமதி இல்லாமல், அத்தகைய அரசாங்க ஊழியர் களுக்கு அப்போதைக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதைவிட அதிக சாதகமாக இருக்கக் கூடாது. 59, பொதுவான அதிகாரியை நியமித்தல் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பஞ்சாயத்துகளும், அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்களும் நிர்ணயிக்கப் படும் விதிகளுக்கு உட்பட்டு இதன் பொருட்டு அதிகாரம் அளிக்கப்படும் அதிகாரி அவ்வாறு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டால் இரண்டுக்கும் அல்லது அவை எல்லர் வற்றுக்குமே அதே உத்தியோகஸ்தர் அல்லது ஊழியரை எந்த அதிகாரங்களையும் செலுத்தவும் செய்யவும் ஒரே மாதிரியான தன்மையுடைய கடமைகளேச் செய்யவும் நியமிக்கலாம். 80. உத்தியோகஸ்தர்கள் ஊழியர்களை மாற்றுதல் (1) பஞ்சாயத்தின் எந்த உத்தியோகஸ்தர் அல்லது ஊழியரையும் (நிர்வாக அதிகாரி உள்பட வேறு ஒரு பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கோ இன்ஸ்பெக்டரால் மாற்றப்படலாம். ஆனல், இதர உத்தியோகஸ்தர்களேயும் ஊழியர்களே யும் (நிர்வாக அதிகாரி தவிர) மாற்றுவதற்குமுன் சம்பந்தப் பட்ட நிர்வாக அதிகாரி அல்லது கமிஷனரைக் கலந்து கொண்டே செய்ய வேண்டும், இந்த உட்பிரிவின்படி, ஒருவரை வேறு இடத்துக்கு மாற்றும்போது, அந்த மாற்றத்தைக் கிரமமாக அமுல் நடத்துவதற்கு தாம் அவசியமெனக் கருதக்கூடிய பொது வான அல்லது விசேஷ கட்டளேகளே இன்ஸ்பெக்டர் பிறப் பிக்கலாம். - (2) இந்தச் சட்டத்திலும் (அல்லது) 1920-ம் வருஷத் திய சென்னே ஜில்லா முனிசிபாலிடிகள் சட்டத்திலும் என்ன சொல்லியிருந்த போதிலும், பஞ்சாயத்து யூனியன் கவுன்சி லுடைய எந்த உத்தியோகஸ் தரையும் ஊழியரையும் (கமிஷனர் உள்பட) வேறு ஒரு பஞ்சாயத்து யூனியன் கவுன் சிலுக்கு அல்லது முனிலிபாலிடிக்கு அரசாங்கம் மாற்றலாம்.