உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 ஏற்பாடு செய்திருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒப்புக் கொள்ளப்படும் வரையறைகளுக்கு உட்பட்டு மாற்றம் செய்யலாம். 75. நன்கொடைகளையும் டிரஸ்ட்களையும் ஏற்றுக்கொள்ளும் அதிகார வரையறை ஒரு பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் தன்னுடைய நிதியை பயன்படுத்தக் கூடிய காரியங்களுக்கு, நன்கொடைகளேயும், டிரஸ்ட் சொத்துக் களேயும் ஏற்றுக்கொள்ளலாம். 76. பொது சாலைகளே பஞ்சாயத்துகளிடம் ஒப்படைத்தல் (1) ஒரு கிராமத்தில் அல்லது நகரத்தில் உள்ள ரோடுகள் யாவும் (தேசீய ரீதியான, ஜில்லா ரீதியான, பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் வசமுள்ள சாலைகள் நீங்கலாக) அவற்றிலுள்ள சகல தளவரிசைகளும், கட்டு வேலைகளும், கல்போன்ற பொருள்களும், சாக்கடை, மதகுகள் முதலியவைகளும் பஞ்சாயத்து செலவிலேர் அல்லது வேறு வகையிலே கட்டுப்பட்டிருந்தாலும் அவை யாவும் பஞ்சாயத்திடம் ஒப்படைக்கப்பட்டவையாகும். (2) அரசாங்கம், அறிவிப்பின் மூலம், இந்தச் சட்டத்தின் பிரிவுகளில் குறிப்பிட்ட, சில ரோடுகள், ஜஸ்தாரைகள், கால்வாய்கள் முதலியவை விஷயத்தில் கட்டுப்படுத்தாது என்று அறிவிக்கலாம். அல்லது திருத் தலாம். அல்லது அதை ரத்து செய்யலாம். 77. பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்களிடம் பொதுச்சாலைகளை ஒப்படைத்தல் (1) பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலிடம் இருக்கும் பஞ்சாயத்து யூனியன் ரோடுகள் என வகைப்படுத்தப்பட்ட எல்லா பொது ரோடுகளும் அவற்றைச் சேர்ந்த நடை பாதைகள், கற்கள்; மற்றும் இதர .ெ பா ரு ள் க ள், கட்டுமானங்கள், சாக்கடைகள், மதகுகள் யாவும் பலேசர் யத்து யூனியன் கவுன்ஸில் செலவிலோ அல்லது வேறு வகையிலோ கட்டப்பட்டிருந்தாலும், அவை யாவும் பஞ்சா யத்து யூனியன் கவுன்ஸிலிடம் ஒப்படைக்கப்பட்டவை யாகும்.