உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 தவிர, எந்த ஒரு வேலையையாவது செய்து முடிக்கும்படி அரசாங்கம் கேட்டுக் கொண்டால், அதன் செலவுக்கு அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும். 79. அபாயகரமான கட்டுமானங்களைக் குறித்து முன்னெச்சரிக்கை (1) பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள ரோடுகளே ஒட்டி யுள்ள ஒரு கட்டுமானம் (கட்டுக்கோப்பை சேதமான நிலையில் பக்கத்தில் நடப்பவர்களுக்கு ஆபத்தை விளேவிக்கக் கூடிய நிலையில் இருப்பதாக சம்பந்தப்பட்ட நிர்வாக அதி காரியோ அல்லது கமிஷனரோ கருதினால், அதன் உரிமை யாளர் அல்லது வசிப்பவரை, அதிலிருந்து உண்டாகக்கூடிய எந்த ஆபத்திலிருந்து தடுப்பதற்காக அதை வேலி போட்டு மறைக்கும்படி அகற்றிவிடுமாறு, அல்லது செப்பனிடுமாறு நோட்டீஸ் மூலம் அறிவிக்க வேண்டும். (2) உடனடியாக நடவடிக்கை எடுப்பது அவசியமாக இருந்தால், கமிஷனர் அல்லது நிர்வாக அதிகாரி, நோட்டீஸ் அனுப்புவதற்கு முன்பு அல்லது அத்தகைய அறிவிப்பு கெடு முடியுமுன்பாக, அந்தக் கட்டுமானத்துக்கு வேலியிட்டும், அகற்றியும், பாதுகாப்புச் செய்தும் அல்லது பழுதுபார்த்தும் அபாயத்தை தவிர்க்க தற்காலிக ஏற்பாடு செய்யலாம். அதற்காகும் செலவை அக்கட்டுமானத்தின் சொந்தக்காரரிடமிருந்து அல்லது வசிப்பவரிடமிருந்து இதன் பின் குறிப்பிடும் முறையில் வசூலிக்கப்படக் கூடியதாகும். 80. ஆபத்தை விளைவிக்கக்கூடிய மரங்கள் பற்றி முன்னெச்சரிக்கை (1) பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் சாலேகளேச் சேர்ந்துள்ள நிலத்தின் மீது நிற்கும் மரம் அல்லது அதன் கிளே விழக்கூடியதாகவும் அதனுல் சாலையை உபயோ கிப்பவர்களுக்கு அல்லது ஆதன்மீது உள்ள எந்தக் கட்டுக் கோப்புக்கும் அபாயம் ஏற்படுத்தக்கூடும் என்று நிர்வாக அதிகாரி அல்லது கமிஷனர் அபிப்பிராயப்பட்டால் அதன் மூலும் அத்தகைய அபாயம் ஏற்படாமல் தடுப்பதற்காக அம்மரத்தின் சொந்தக்காரரை அதைப் பாதுகாப்பு செய்யும்படி அல்லது கிளேகளே நீக்கும்படி அல்லது வெட்டி விடும்படி நோட்டீஸ் மூலம் கேட்டுக் கொள்ளலாம்.