பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175 கமிஷனருடைய கடமையாகும். மேற்படி உத்தரவில் குறிப் பிடும் காலவுரம்புக்குள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாவிடில் ரெவின்யூ போர்டு அதிகாரிகள், சென்ன்ே நில ஆக்கிரமிப்புச் & Lillo- [Madras Land Encroachment Act 1905} நடவடிக்கை எடுத்து அவற்றை அகற்ற வேண்டும். 83. சமுதாய சொத்துகள் அல்லது வருமானம் பஞ்சாயத்துக்குச் சேரும் கிராம அல்லது நகர ஜனங்களின் பொது நன்மையைக் கருதி நிர்வகிக்கப்படும் அல்லது பழக்கவழக்கம் காரணமாக அவர்களுடைய சொத்தாக கருதப்படும் மீன் பிடிக்கும் உரிமை உள்பட சொத்து அல்லது வருமானம் அல்லது. பொது நிலத்தை அனுபவிப்பவருடைய உரிமை அல்லது குறிப்பிட்ட நிலத்தை அனுபவிப்பவருடைய உரிமை அல்லது குறிப்பிட்ட நீர்ப்பாசன வாய்க்காலில் உள்ள நிலத்தை அனுபவிப்பவர்களுடைய உரிமை ஆகியவை, அரசாங்கம் இதற்கென அறிவிப்பு வெளியிட்டால் பஞ்சாயத்தைச் சேரும். மேற்சொன்னவற்றை பஞ்சாயத்து, அதன் ஜனங்களுக்கு அல்லது பாத்தியதை உடையவர்களுக்கு ந ன் ைம பயக்கும்படி நிர்வகித்து வர வேண்டும் 84. ஜல ஆதாரங்களை பஞ்சாயத்துகளுக்குச் சேர்த்தல் (1) கால்வாய்கள், ஊற்றுக்கள், நீர்த்தேக்கங்கள், குழாய்கள், ஓடைகள், குளங்கள், கிணறுகள் ஆகிய யாவும் (பொதுமக்களால் உபயோகப்படுத்தி வந்தவை உள்பட) இச்சட்டம் வருவதற்கு முன்பு ஏற்பட்டதாக இருந்தாலும், அல்லது பின்னல் ஏற்பட்டிருந்தாலும் சரி பஞ்சாயத்து நிதியில் அமைக்கப்பட்டிருந்தாலும் அல்லது வேறு வகையில் செய்யப்பட்டிருந்தாலும் சரி (தனிப்பட்டவரின் சொத்து அல்லாத) பஞ்சாயத்தைச் சேரும்; மேலும், அதன் அருகில் உள்ள நிலங்களும் பஞ்சாயத்தையே சேரும். இவை பஞ்சா யத்தின் நிர்வாகத்துக்குள் இருக்கும். இருப்பினும், விவசாய நீர்ப்பாசன அமைப்புகள், அவற்றின் அருகில் உள்ள நிலங்கள் எவற்றையும் இந்த உட்பிரிவில் சொல்லப்பட்டிருப்பது கட்டுப்படுத்தாது. (2) பஞ்சாயத்தைக் கலந்துகொண்டு அதற்கு ஆட் சேபணை ஏதாவது இருந்தால் அதற்கு மதிப்புக் கொடுத்து,