பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 அரசாங்கம் அறிவிப்பு மூலம், மேலே சொல்லப்பட்ட பஞ்சா யத்தின் நிர்வாகத்தை வரையறை செய்யவோ அல்லது நிர்ணயிக்கவ்ோ செய்யலாம். அல்லது ஜல ஆதாரங் களேயும் அதன் அருகிலுள்ள நிலங்களே எடுத்து தாமே நிர்வகிக்கலாம். - 85. நீர்ப்பாசன அமைப்புகளை பராமரித்தல்குடி மராமத்துகளே நிறைவேற்றுதல் (1) அரசாங்கம் நிர்ணயிக்கப்படும் நிபந்தனேகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு எந்த ஒரு நீர்ப்பாசன வேலேயையும் பராமரித்தல், பாதுகாத்தல், மானேஜ்மெண்ட் பார்த்தல், நிலங்களுக்கு தண்ணிரை ஒழுங்காக விநியோ கித்தல் இவைகளே ஒரு பஞ்சாயத்து அல்லது ஒரு பஞ்சா யத்து யூனியன் கவுன்சிலுக்கு அரசாங்கம் மாற்றிக் கொடுக்கலாம். (2) பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சில், நிர்ணயிக்கப்படும் கட்டுப்பாடுகளுக்கு இணங்க கிராமம் அல்லது நகரத்திலுள்ள ஒரு நீர்ப்பாசன அமைப்பின் மூலாதாரத்துக்கு குடி மராமத்து வேலையை நிறைவேற்றவும், இதற்காக குறிப்பிட்ட நிர்ணயப்படி ஒரு வரி வசூலிக்கவும் அதிகாரம் உண்டு. இருப்பினும், மேற்படி கிராமத்தில் அல்லது நகரத்தில் இருக்கின்ற பாசன அமைப்பின் ஆதாரத்துக்கு பஞ்சாயத்து குடி மராமத்து செய்யத் தவறிப்போல்ை, அதன் விஷயம்ாக் சென்ன கட்டாய லுேலேஹரங்கும் சட்டம் (Madrs Compulsory, Labour Act, 1858] [Central Act I of 1858] 17 réirsth கிராம சமூகத்துக்காவது அல்லது அதைச் சேர்ந்தவர்களுக் காவது உள்ள பொறுப்பு நீங்கிவிடுவதாக, இந்த உட்பிரிவில் காணப்படும் எதலுைம் கருதப்படக் கூடாது. (3) இப்பிரிவின்படி நீாப்பாசன அமைப்பின் பராமரிப்பு வேலை மாற்றிக் கொடுக்கப்பட்டிருந்தால், அதில் அரசாங் கத்துக்கு உள்ள மீன் பிடிக்கும் உரிமையும் மாற்றப்பட்டு நிர்ணயிக்கப்படும் நிபந்தனேகள் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலேயே சாரும. --