18i 95. அபாயகரமான குளங்கள், கிணறுகள், பொத்துகள் குறித்து முன்னேற்பாடு (1) குளம், குட்டை, கிணறு, குழி, ஓடை, அனே, பாலக்கரை அல்லது இதர இடங்கள் போதிய மராமத்து செய்யாததால் அல்லது பாதுகாப்பான அடைப்பு இல்லாத தால் பொது சுகாதாரத்துக்கு அல்லது பாதுகாப்புக் அபாயம் விளைவிக்கக் கூடியதாக இருப்பதாக கமிஷனர் அல்லது நிர்வாக அதிகாரி அபிப்பிராயப்பட்டால், பஞ்சர் யத்து யூனியன் கவுன்ஸில் அல்லது பஞ்சாயத்து அங்கீ காரத்துடன் அபாயத்தினின்றும் பாதுகாக்கும் பொருட்டு, முன்னேற்பாடாக அவற்றைப் பழுது பார்க்குமாறு அல்லது மூடி விடுமாறு அதன் சொந்தக்காரர்களுக்கு நோட்டீஸ் மூலம் உத்தரவிடலாம். - (2) அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாக இருந்தால், அவர்களுக்கு நோட்டீஸ் கொடுப் பதற்கு முன்போ, அல்லது கொடுக்கப்பட்ட நோட்டீஸ் காலம் முடிவடைவதற்கு முன்போ, அபாயத்தை தவிர்க்கும் பொருட்டு தமக்குச் சரியெனத் தோன்றும் அளவுக்கு தற் காலிக நடவடிக்கைகளே மேற்கொள்ளலாம். இதற்காகும் செலவை சொந்தக்காரர்களிடமிருந்து இதன் பின்ன்ர் நிர்ணயிக்கப்படும் விகிதத்தில் வசூலித்துக் கொள்ளலாம். 98. நிலங்கள் அல்லது கட்டிடங்களிலிருந்து அசுத்தமான குப்பை கூளங்கள், விஷச் செடிகளை அகற்றிவிடுதல் (1) ஒரு கட்டிடம் அல்லது நிலம் மிகவும் அசுத்தமான நிலையில் குப்பை கூளம் படிந்து, நச்சுச் செடிகள் மரங்கள் வளர்ந்து, பார்வைக்கு விகாரமாகவும் அதனுல் பொது மக்களுக்கு அபாயம் விளேவிக்கக் கூடியதோடு அருகில் உள்ளவர்களுக்கும் அபாயம் உண்டாக்கக்கூடிய நிலையில் இருப்பதாக கமிஷனர், அல்லது நிர்வாக அதிகாரிக்குத் தோன்றில்ை, மேற்படி கட்டிடத்தின் அல்லது நிலத்தின் சொந்தக்காரருக்கு அல்லது அதில் வசிப்போருக்கு ஒரு நோட்டீஸ் மூலம், மேற்கண்டவற்றை அப்புறப்படுத்தும்படி அல்லது சுத்தமாக வைத்திருக்கும்படி அல்லது சரிவர வைத்துக்கொள்ளும்படி, செடி கொடி முதலியவற்றை அகற்றும்படி அல்லது எடுத்துவிடும்படி நிர்வாக அதிகாரி அல்லது கமிஷனர், மேற்படி தொல்லேயை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/372
Appearance