#90 112. தொழிற்சாலைகள் கட்டவும் இயந்திரங்கள் அமைக்கவும் அனுமதி எவரும், பஞ்சாயத்துக் கிராமங்களில் பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலின் அனுமதி இல்லாமலும், பஞ்சாயத்து நகரத்தில் பட்டணப் பஞ்சாயத்து அனுமதி இல்லாமலும் அந்த அனுமதியில் கண்டிருக்கும் நிபந்தனே களின்படி நடந்தால் அல்லது (a) நீராவியின் சக்தியையோ, நீரின் சக்தியையோ, இயந்திரத்தின் சக்தியையோ அல்லது மின்சாரத்தின் சக்தி யையோ உபயோகிக்கத் திட்டமிட்டு, ஒரு தொழிற் சாலேயையோ, தொழிற் பட்டறையையோ அல்லது தொழில் இடத்தையோ கட்டவோ அல்லது நிறுவவோ; (b) மேற்சொன்ன சக்தியால் இயங்கும் எந்த யந்தி ரத்தையும் அல்லது தயாரிப்புத் தளவாடத்தையும் விதிகளின் மூலம் விலக்கு அளிக்கப்பட்டவற்றைத் தவிர, எந்தக் கட்டிடத்திலும் பொருத்தக்கூடாது. 1 . 3. லைசென்ஸ்களும் அனுமதிகளும் வழங்குவதற்கும் புதுப்பிப்பதற்கும் விதிகள் இயற்ற அரசாங்கத்துக்கு உள்ள அதிகாரம் (1) அரசாங்கம் கீழ்க்கண்டவை குறித்து விதிகள் இயற்றலாம். (a) 111-வது பிரிவின்படி, லேசென்ஸ்கள் வழங்கு வதையும் புதுப்பிப்பதையும் தடைசெய்தல் அல்லது ஒழுங்கு படுத்தல்; அவை செல்லத்தக்க கால அளவை நிர்ணயித்தல்; (b) லேசென்ஸுக்கான அல்லது புதுப்பித்துக் கொள் வதற்கான விண்ணப்பத்தை எந்தக் கால அளவுக்குள் அனுப்ப வேண்டும் என்பதை நிர்ணயித்தல்; (c) 11:2-வது பிரிவின்கீழ் அனுமதி வழங்குவதை தடை செய்தல் அல்லது ஒழுங்குபடுத்துதல்; (2) (1)-வது உட்பிரிவில் (c) பகுதியில் செய்யப்படும் விதிகள், பஞ்சாயத்துக் கிராமங்களில் பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலுக்கும் பஞ்சாயத்து நகரத்தில் நகரப் பஞ்சாயத் துக்கும், சில இடங்களே தொழிற்சாலே பகுதியாக ஒதுக்கவும் அவற்றை தவிர வேறு வேறு பகுதிகளில், தொழிற்சாலே,
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/381
Appearance