பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 பாதகமில்லாமலே அரசாங்கம் அந்த சட்டத்தை ஏதாவது ஒரு கிராமத்துக்கு நகரத்துக்கு அல்லது அதன் ஒரு பகுதிக்கு விஸ்தரிக்கும் போது. (a) சினிமா தவிர, இதர காரியங்களுக்கு ஒரு கட்டி டத்தை அல்லது இடத்தை உபயோகிக்க லேசென்ஸ் கோரும் விண்ணப்பமானது பஞ்சாயத்து நகரங்களில் நிர்வாக அதிகாரிக்கும், பஞ்சாயத்து கிராமங்களில் கமிஷனருக்கும் செய்து கொள்ளப்பட வேண்டும். லேசென்ஸ் வழங்கவோ அல்லது மறுக்கவோ அவர்களுக்கு அதிகாரம் உண்டு. (b) நிர்வாக அதிகாரி அல்லது கமிஷனர் லேசென்ஸ் வழங்கியோ, மறுத்தோ அல்லது நிறுத்தி வைத்தோ பிறப் பிக்கும் உத்தரவை எதிர்த்து பட்டணப் பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கு அப்பீல் செய்து கொள்ளலாம். (c) இந்தப் பிரிவின்கீழ், வழங்கப்படும் லேசென்ஸ் களுக்கு கட்டணத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் பஞ்சா யத்து யூனியன் கவுன்சிலால் வசூலிக்கப்பட்டால், சம்பந்தப் பட்ட கிராமப் பஞ்சாயத்தின் கணக்கிலும், பட்டனப் பஞ்சாயத்தால் வசூலிக்கப்பட்டால் பட்டணப் பஞ்சாயத்தின் கணக்கிலும் வரவு வைத்துக் கொள்ளப்பட வேண்டும். நான்காவது பகுதி வரி விதிப்பும் நிதியும் 115, 15j Gg;& sufi [Local cess] (1) ஒவ்வொரு பஞ்சாயத்து அபிவிருத்தித் தொகுதி யிலும், ஒவ்வொரு பசலிக்காகவும் அரசாங்கத்துக்கு செலுத் தப்படும் நில வரியில் ரூபாய்க்கு 45 காசுகள் வீதம் பிரதேச வரி விதித்து வரவேண்டும். விளக்கம்: இந்தப்பிரிவின்படியும் 116-வது பிரிவின்படியும் (Land Revenue) நிலவரி என்பது நிலத்தின் மீது குத்தகை சம்பந்தமாகவும் லேசென்ஸ் க்காகவும் நிலத்தின்மீது அரசாங் கத்துக்குச் செலுத்த வேண்டிய வரி என்று அர்த்தம்; மேலும்,116-வது பிரிவின்படியே சர்சார்ஜ் கட்டணத்திற்காக கொடுபட வேண்டியது. இதில் அடங்காது. நிலத்தின் பாசனத்துக்காக வழங்கப்பட்ட அல்லது உபயோகிக்கப்பட்ட