பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

203 பஞ்சாயத்து யூனியன் (கல்வி) நிதிக்கு பற்ருக எழுத அரசாங்கம் அங்கீகரித்துள்ள மொத்த செலவு தொகை கீழே குறிப்பிட்டிருக்கிற முறையில் படிப்படியாக பிரிக்க வேண்டும். 118-வது பிரிவில் குறிப்பிட்டுள்ள, தொகுதியின் நில வரி ஒப்படைக்கு சமமான தொகையானது முதல் படியாகும். சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அபிவிருத்தி தொகுதியில் உள்ள மக்களுக்கு தலேக்கு 250 காசுகள் என்ற விகிதத்துக்கு மேற்படாமல் முதல்படிக்கு அதிகமாக உள்ள செலவு தொகை யானது இரண்டாவது படியாகும். ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலுக்கும் அரசாங்கம் அளிக்கும் பிரதேச கல்வி மான்யமானது. அந்த தொகுதி சம்பந்தமாக அரசாங்கம் குறிப்பிடக் கூடியபடி இரண்டாவது படியில் குறிப்பிட்டுள்ள தொகையில், 50 சத விகிதத்துக்கு குறையாமலும் 80 சதவிகிதத்துக்கு மேற்படா மலும் இருக்கும். 129. பிரதேச வரி, சர்சார்ஜூக்கு இணையான மான்யம் (Local Cess Surcharge Matching Grant) ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கும் அரசாங்கம் பிரதேச வரி சர்சார் ஜூ க்கு இணையான மான்யம் ஒன்றை ஆண்டுதோறும் அளிக்க வேண்டும். இது 116-வது பிரிவின்கீழ் நிச்சயிக்கப்பட்டுள்ள குறைந்த பட்ச விகிதத் துக்கு மேற்பட்டு, பஞ்சாயத்து அபிவிருத்தி தொகுதியில் விதிக்கப்படும் பிரதேச வரி சர்சார் ஜூ க்கு நிர்ணயிக்கப்படும் விகிதப்படி கணக்கிடப்படும் தொகையாக இருக்கும். 180. பஞ்சாயத்து அபிவிருத்தி தொகுதிகளை வகைப்படுத்துதல் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கு மான்யங்கள் அளிக்கும் விஷயமாக அரசாங்கம் பஞ்சாயத்து அபிவிருத்தி தொகுதிகளே ஐந்து வருவடிங்களுக்கு ஒருமுறை தங்களுக்கு உசிதம் என தோன்றும் முறையில் வகைப்படுத்தலாம். வெவ்வேறு வகையான தொகுதிகளுக்கு .ெ வ வ் வேறு விதமான மான்யங்களே வழங்க அரசாங்கத்துக்கு அதிகாரம் உண்டு. ஐந்து வருஷங்களுக்கு ஒரு முறை, பஞ்சாயத்து அபிவிருத்தித் தொகுதிகளே, வகைப்படுத்தியிருப்பதை மாற்றி அமைக்க அரசாங்கத்துக்கு அதிகாரம் உண்டு.