உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 131. பிரதேச சாலைகள் மான்யம் (Local Roads Grant) வருஷந்தோறும் ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கும் சால்ேகள் மான்யம் ஒன்றை அரசாங்கம் அளிக்க வேண்டும். ஒவ்வொரு பஞ்சாயத்து அபிவிருத்தி தொகுதியிலும் உள்ள மக்கள் தொகையில், நபருக்கு 40 காசுகள் என்ற விகிதத்தில் கணக்கிடப்பட்ட ஒரு தொகை யாகும். இத்தொகை, அந்தப் பிரதேசத்தில் சாலைகளேப் பராமரிப்பதற்காகச் செலவிடப்பட வேண்டும். இந்தச் சட்டத்தின் ஆரம்பத்திற்கு முன்பு, 1981-ம் வருஷத்திய மோட்டார் வாகனங்களின் வரிவிதிப்புச் சட்டத்தின் பிரிவு 10 (1) (a) பிரகாரம் செலுத்த வேண்டிய தொகைகளுக்குப் பதிலாக கொடுக்கப்படுவதாகும். ஐந்து வருஷங்களுக்கு ஒரு முறை பரீசீலனே செய்து, பிரதேச தேவைகளையும் ஆதாரங் களேயும் கவனித்து இத் தொகை நிர்ணயிக்கப்பட வேண்டும். 132. கிராம வீட்டுவரிக்கு இணையான மான்யம் கிராமப் பஞ்சாயத்தானது வீட்டு வரியாக வசூலிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் சமமான தொகையை அரசாங்கம் ம்ான்யமாக அளிக்க வேண்டும். இது, கிராம வீட்டு வரிக்கு இணையான மான்யம் என்று கூறப்படும். 183. சில விஷயங்களில் மான்யங்களிலிருந்து தொகையைக் கழித்துக் கொள்ளுதல் ஒன்றுக்கு மேற்பட்ட பஞ்சாயத்துக்களுக்குப் பொது வான நன்மையைக் கருதி, ஒரு வேலையை பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் மேற்கொண்டால், அவ்வேலேக்கு ஆகிற செலவை, அதல்ை பலன் அடைகிற பஞ்சாயத்துக்களி டையே பங்கீடு செய்து கொள்ளலாம். அத்தகைய சந்தர்ப் பத்தில், பஞ்சாயத்து யூனியன் கவுன்சில், 115, 124-வது பிரிவுகளின்கீழ் மேற்படி பஞ்சாயத்துக்களுக்குக் கொடுக்கப் பட வேண்டிய தொகையில், பொது நன்மையைக் கருதி செய்த வேலேக்கான செலவில் அந்த பஞ்சாயத்துக்கு உரிய பங்குத் தொகையை வசூலித்துக் கொள்ள உரிமை உண்டு. 184. பஞ்சாயத்து யூனியன் நிதி, நகரப் பஞ்சாயத்து நிதி, பஞ்சாயத்து நிதி ஆகியவற்றின் அமைப்பு (1) ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியனுக்கும் பஞ்சா யத்து யூனியன் (பொது) நிதி ஒன்றும், பஞ்சாயத்து யூனியன் (கல்வி) நிதி ஒன்றும் இருக்க வேண்டும்.