207 (21) மேற்சொன்ன உட்பிரிவுகளிலும், 138-வது பிரிவி லும் சொல்லப்பட்டவை தவிர, மற்ற எல்லா தொகைகளும்; பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் நிதியிலிருந்து நிர்வகிக்கப் படுகிற அல்லது நிதி உதவி செய்யப்படுகிற அல்லது பஞ்சா யத்து யூனியன் கவுன்சில் நிர்வகித்து வருகிற ஸ்தாபனங்கள், சேவைகள் காரணமாக கிடைக்கலாம். அல்லது அவற் றிற்கு உதவித் தொகையாக கிடைக்கலாம். அவற்றிற் காகும் செலவு காரணமாக கிடைக்கலாம். (22) பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் பெற்றுக்கொண்ட மற்ற எல்லா தொகைகளும் இதில் அடங்கும். பஞ்சாயத்து யூனியன் (கல்வி) நிதி 136. பஞ்சாயத்து யூனியன் (கல்வி) நிதி. பஞ்சாயத்து யூனியன் (கல்வி) நிதியில் வரவு வைக்க வேண்டிய இனங்கள் வருமாறு : (1) 115-வது பிரிவின்கீழ் வசூலிக்கப்பட்ட பிரதேச வரியில் 4/9 பாகம். (2) 118-வது பிரிவின்கீழ் அரசாங்கம் வழங்கிய நிலவரி ஒப்படை. (3) அரசாங்கம் வழங்கும் கல்வி மான்யம். (4) குறிப்பிட்ட ஓர் ஆண்டில் அதற்கான நிதியின் வரவு செலவு (பட்ஜட்) சரிக்கட்ட அவசியம் என அரசாங்கம் நிச்சயிக்கக்கூடியதும் பஞ்சாயத்து யூனியன் (பொது) நிதி யிலிருந்து கொடுக்கப்படுவதுமான உதவித் தொகை. (5) 1920-ம் வருஷத்திய ஆரம்ப கல்விச் சட்டத்தின் [Madras Elementary Education Act, 1920] & th 1653r யத்து யூனியன் கவுன்ஸிலின் அதிகார எல்லேக்குள் விதிக்கப் படும் எல்லா அபராதங்களும் தண்டனைத் தொகைகளும். (6) ஆரம்பக் கல்வி நலனுக்காக, பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்குச் சொந்தமான அல்லது அதன் நிர்வாகத்தில் உள்ள நிதி ஏற்பாடுகளிலிருந்தும் இதர சொத்துக்களிலிருத் தும் கிடைக்கும் வருமானம்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/398
Appearance