உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

211 கட்டாயமானவை, உசிதம்போல் செய்யக்கூடியவை, வெளிப் படையாக அறிவிக்கக்கூடியவை என்று சொல்ல்க்கூடிய எல்லா காரியங்களும் அடங்கும். மேற்படி காரியங்களுக்காக அரசாங்கம் நிர்ணயிக்கக்கூடிய விதிகளுக்கும் விசேஷ் உத்தரவுகளுக்கும் உட்பட்டு, மேற்படி நிதிகளே, பஞ்சாயத்து அபிவிருத்தி தொகுதிக்குள் அல்லது கிராமத்துக்குள் அல்லது நகரத்துக்குள் செலவுசெய்ய வேண்டும். தவிரவும், பஞ்சர் யத்து அபிவிருத்தி தொகுதிக்கு வெளியே இன்ன காரியங் களுக்காகச் செலவு செய்ய வேண்டும் என்று இந்தச் சட்டத் தின் மூலம் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் அல்லது இன்ஸ் பெக்டர் அனுமதி அளித்தாலும், மேற்கண்ட வரையறை களுக்கு உட்பட்டு அவ்வாறு செலவு செய்ய வேண்டும். (2) கீழ்க்கண்டவற்றிற்காக தொகைகளேச் செலுத்த ஏற்பாடு செய்வது ஒவ்வொரு பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அல்லது பஞ்சாயத்தின் கடமையாகும்: (i) தான் வாங்கியுள்ள எந்தக் கடன்களுக்காகிலும் செலுத்த வேண்டிய தொகை ; - (ii) தனது உத்தியோகஸ்தர்கள், ஊழியர்களுக்கு சம்பளங்கள், அலவன்ஸ் கள், பென்ஷன்கள், பிராவிடன்ட் நிதி உதவித்தொகைகள்; (iii) கோர்ட்டாரின் டிக்ரி’ அல்லது உத்தரவின்படி கட்டவேண்டிய தொகை. (iv) இச் சட்டத்தின்படியாவது, அல்லது வேறு சட்டத்தினுலாவது கட்டாயமாக செய்ய வேண்டி நேரிடும் செலவுகள். (3) பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அல்லது பஞ்சா யத்தானது அ ர ச | ங் க அனுமதியுடன் இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தமான எந்த நிதிக்கும் உதவித்தொகை அளிக்கலாம். (4) இன்ஸ்பெக்டருடைய அனுமதியுடன் பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் (i) பஞ்சாயத்து அபிவிருத்தி தொகுதியில் அல்லது பட்டணத்தில் அல்லது கிராமத்தில் நடக்கும் பொதுக் கண்காட்சி, விழா அ ல் ல து வேடிக்கை சம்பந்தமான செலவுக்கு உதவி செய்யலாம்.