உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212. (ii) தரும நிதி, ஏழைகள் சாகாய நிதி, நோய் நிவாரணத்துக்கு, வலுவற்றவர்களுக்கு, நோய்களுக்கான காரணம் பற்றிய ஆராய்ச்சி போன்றவற்றிற்கும் உதவி அளிக்கலாம்; (iii) வேறு ஏதேனும், விசேஷ காரியங்களுக்காகவும் உதவி அளிக்கலாம். 140. பட்ஜட்களை தயாரித்தலும் அங்கீகரித்தலும் (Budgets) . (1) நிர்வாக அதிகாரியும், கமிஷனரும், ஒவ்வொரு ஆண்டும் வரவு செலவுத் திட்டம் (பட்ஜட்) ஒன்றை தயாரித்து, பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலிடம் சமர்ப்பிக்க வேண்டும்; மேற்படி திட்டத்தில், அடுத்த ஆண்டுக்கு உத்தேச வரவுகள் செலவுகள் எவை என்பதைக் குறிப்பிட்டுக் காட்ட வேண்டும். - - (2) பட்ஜட்டை (வரவு செலவு திட்டம்) தயார் செய்து நிர்ணயிக்கப்படும் தேதியிலோ அதற்கு முன்னரோ குறிப் பிடப்படும் அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். அவசியமான கர்ரியங்கள் அல்லது நிகழ்ச்சிகள், சேவைகள் ஆகியவற் றுக்கு பட்ஜட்டில் போதிய ஏற்பாடு செய்யப்படவில்லையென அவர் கருதினால், தகுந்த முறையில் திருத்தம் செய்வதற்காக நிர்வாக அதிகாரி அல்லது கமிஷனருக்கு தி ரு ப் பி அனுப்பலாம். - (3) பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் தகுதி எனக் கருதும் திருத்தங்களுடன் பட்ஜட்டை அனுமதிக்கலாம். உட்பிரிவு (2)-ல் குறிப்பிடப்பட்ட அதி காரிக்கும் பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அல்லது பஞ்சா யத்துக்கும் இடையே அபிப்பிராய பேதம் ஏற்பட்டால், பட்ஜட்டை, பஞ்சாயத்துகள் விஷயத்தில், இன்ஸ்பெக்ட ருக்கும், பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் விஷயத்தில் அரசாங்கத்துக்கும் அனுப்பி வைக்க வேண்டும். தாங்கள், அவசியம் என்று கருதும் விதத்தில் பட்ஜட்டில் திருத்தம் செய்ய இன்ஸ்பெக்டருக்கும், அரசாங்கத்துக்கும் அதிகாரம் உண்டு. (4) ஒரு வருஷத்தின் மத்தியில், பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் பட்ஜட்டில் கண்டுள்ள வரவு இனங்கள் பற்றியோ அல்லது எடுத்துக் கொண்டி ருக்கிற வெவ்வேறு சேவைகளின் பொருட்டு, செலவு