உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213 தொகையில் பங்கீடு சம்பந்தமாகவோ பட்ஜட்டில் குறிப் பிட்டுள்ள இலக்கங்களே மாற்றுவது அவசியம் என்று கருதினுல், உபரியாகவோ அல்லது திருத்தப்பட்ட ஒன்றை (1), (2) உட்பிரிவுகளில் வகை செய்துள்ளபடி தயாரித்து அங்கீகரிக்கலாம். அல்லது சமர்ப்பித்து திருத்தம் செய்யலாம். ஆல்ை, மாற்றம் எதையும் நிர்ணயிக்கப்பட்ட அதிகாரிய சம்மதமின்றி அமுலுக்கு கொண்டு வரக்கூடாது. (5) ஒவ்வொரு வருஷமும் நிர்ணயிக்கப்படும் தே குள்ளோ அதற்கு முன்னரோ ஒவ்வொரு கமிஷனரும், நிர் யிக்கப்படக்கூடிய அதிகாரியின் மூலம் நிர்ணயிக்கப்பட் கூடிய பாரத்தில் (நமூன) அடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜட் ஒன்றை தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் பஞ்சாயத்து யூனியன் (கல்வி) நிதி சம்பந்தமான வரவு செலவு இனத்தைக் காண்பிக்க வேண்டும். (6) 3-வது உட்பிரிவில் சொன்ன பட்ஜெட் சம்பந்தமாக அரசாங்கம், தங்களுக்கு உசிதமாகத் தோன்றும் உத்தரவு களே பிறப்பிக்கலாம். அதை நிறைவேற்றுவது சம்பந்தப் பட்ட பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலின் கடமையாகும். (7) பஞ்சாயத்து யூனியன் (கல்வி)நிதியின் கணக்குகள் 141-வது பிரிவின்கீழ் அரசாங்கத்தால் நியமிக்கப்படும் ஆடிட்டரால் பரிசீலனே செய்து தணிக்கை செய்யப்படும். அந்த ஆடிட்டரின் தணிக்கை அறிக்கைமீது அரசாங்கம் கூறக்கூடிய யோசனைகளே, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் நிறைவேற்ற வேண்டும். - 141. ஆடிட்டர்களை நியமித்தல் (1) பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் நிதிசம்பந்தமான வரவு செலவு கணக்குகளே தணிக்கை செய்வதற்கு அரசாங்கம் ஆடிட்டர்களே நியமிக்க வேண்டும். §§§učr 363rdö(3371 (Indian Penal Code-central Act, XLV of 1860) 21-வது பிரிவின்படி அத்தகைய ஆடிட்டர்கள் 'அரசாங்க உத்தியோகஸ்தர்’களாகக் கருதப்படுவார்கள். (2) ஆடிட்டர்களுடைய சம்பளம், அலவன்ஸ் க்காவது அல்லது கணக்குகளேத் தணிக்கை செய்ய ஏற்படும் இதர செலவுகளுக்காவது அரசாங்கம் பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலிடமிருந்து எவ்வித் தொகையையும் வசூலிக்கக்கூடாது.