215 ஐந்தாவது பகுதி மேல் விசாரணை செய்யும் அதிகாரிகள் 144. பஞ்சாயத்துகளையும் பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்களையும் மேற்பார்வையிட அதிகாரிகளை நியமித்தல் (1) இச்சட்டத்தின்கீழ் ஏற்படுத்தப்படும் பஞ்சாயத் துகள் அல்லது பஞ்சாயத்து யூனியன்களின் செயல் முறைகளே பார்வையிடுவதற்காக அல்லது மேற்பார்வையிட தேவைப்படும் அதிகாரிகளே அரசாங்கம் நியமிக்க வேண்டும். (2) உட்பிரிவு (1) ல் குறிப்பிட்டுள்ள அதிகாரிகளின் தரப்பிரிவினை, நியமன முறை அதிகாரிகளுடைய சேவை, நிபந்தனை, சம்பளம், அலவன்ஸ், ஒழுங்கு நடத்தை சம்பந்த மாக இந்தச் சட்டத்தின்கீழ் விதிகள் செய்து முறைப்படுத்த அரசாங்கத்துக்கு அதிகாரம் உண்டு. 145. பார்வையிடும் அதிகாரிகளுக்கு உள்ள அதிகாரங்கள் (1) இன்ஸ்பெக்டர் அல்லது கலெக்டர் அல்லது 114-வது பிரிவின்கீழ் நியமிக்கப்படும் எந்த ஒரு அதிகாரியாவது அல்லது அரசாங்கம் அல்லது அவர்கள் அதிகாரம் அளிக்கும் நபராவது கீழ்க்கண்டவற்றை பார்வையிடும் அதிகாரம் உடையவர்கள் : - (a) பஞ்சாயத்து அல்லது அதன் நிர்வாக அதிகாரி பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் அல்லது அதன் கமிஷனர் மேற்பார்வையிலுள்ள ஸ்தாவர சொத்து அல்லது நடந்து கொண்டிருக்கின்ற ஒரு வேலேயின் அபிவிருத்தியை பிரவே சித்து பார்வையிடலாம். (b) பஞ்சாயத்து அல்லது அதன் நிர்வாக அதிகாரி அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அல்லது அதன் கமிஷனர் மேற்பார்வையிலுள்ள அல்லது பராமரிப்பில் உள்ள பள்ளி, மருந்து சாலே, அம்மை குத்தும் இடம், சத்திரம் அல்லது வேறு எந்த ஸ்தாபனத்திலும் இ ரு க் கிற ரெகார்டுகள், ரிஜிஸ்தர்கள் அல்லது மற்ற பத்திரங்களே பார்வையிடலாம்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/406
Appearance