பஞ்சாயத்தினுல் உண்டாகும் நன்மை 1. பஞ்சாயத்து என்ருல் என்ன ? பஞ்சாயத்து என்னும் சொல்லிற்குக் கிராமத்தின் நலனைக் கவனிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பெரியவர் களைக் கொண்ட குழு என்பதே பொருள். கடந்த காலத்தில் அதன் பொருள் எப்படியிருந்த போதிலும், தற்போது அதற்கு உரிய எண்ணிக்கை இல்லை, கிராமத்திலுள்ள மக்கள் தொகைக்குத் தகுந்தாற் போல அதிக எண்ணிக்கையுள்ள உறுப்பினர்கள் பஞ்சாயத்தில் இருக்கின்றனர். முன்னுளில், நமது நாட்டில் கிராமம் தன்னிறைவு செய்து கொள்ளக் கூடிய ஒரு சிறு குடியரசாகவே விளங்கியது. தேவையான உணவையும், உடையையும்; அது உற்பத்தி செய்து கொண்டது. குடிமக்கள் மனநிறைவு கொள்ளும் வகை யில் சிக்கல்களைத் தீர்த்துக் கொண்டது. சமுதாயத்தில் ஒழுங்கையும், அமைதியையும், மகிழ்ச்சியையும் நிலைநாட்டி வளமான கிராமத்தை உருவாக்கும் பெரும் பெறுப்பு பஞ்சா யத்து மன்றத்திடம் இருந்தது. கிராம விவகாரங்களில் பஞ்சாயத்து உறுப்பினர்கள் காணும் முடிவுகளைப் பெரும் பாலும் யாரும் எதிர்ப்பதில்லை. 2. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், பஞ்சாயத்து அதன் அதிகாரத்தையும், மதிப்பையும் இழந்தது. நிர்வாகமும், நீதியும் மத்திய அரசின் கீழ் வந்தன. ரயத்துவாரி முறையை ஏற்படுத்தியதன் விளைவால், கிராமத்தில் சமுதாய உணர்ச்சி குறைந்தது. கூட்டமாக இல்லாமல், தனியாக ஒவ்வொருவரும் அரசாங்கத்துடனும், அரசாங்கப் பிரதிநிதியுடனும் தொடர்பு கொள்ள வேண்டியதாயிற்று. போக்குவரத்துக்களின் வளர்ச் சியும், மேற்கு நாடுகளில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் தாக்கு தலும், பஞ்சாயத்து முறையினை அழித்துக்கொண்டு வந்தன. நாளடைவில் பஞ்சாயத்து முறை வழக்கிறந்த ஒன்ருக மாறியது. எனினும் மேலைநாட்டுக் கல்வியால் நகர மக்களி டையே அரசியல் விழிப்பு உணர்ச்சியால் ஏற்பட்டது. அதஞல்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/41
Appearance