பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219 இந்தச் சட்டத்தின்படியோ அல்லது வேறு எந்தச் சட்டத்தின் படியோ தங்களுக்கு உரிய கடமையைச் செய்யத் தவறி விட்டதாக இன்ஸ்பெக்டர் அபிப்பிராயப்பட்டால், ஒரு குறிப்பிட்ட கால அளவுக்குள் அதை செய்து முடிக்க வேண்டும் என எழுத்து மூலம் உத்தரவிடலாம். (2) இவ்விதம் நிர்ணயிக்கப்படும் காலத்துக்குள் அவ் வேல்ே நிறைவேற்றப்படவில்லையென்றல், அதை செய்து முடிப்பதற்காக, இன்ஸ்பெக்டர் ஒரு நபரை நியமிக்கலாம்; இதற்காகும் செலவை பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் நிதிக்கு பொறுப்பு வகிக்கிற நபர் கொடுக்க வேண்டும் என்று கட்டளேயிடலாம். அவ்வாறு கொடுக்கும்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள கட்டணங்களே கொடுத்து தீர்ப்பதற்கு ஏற்படும் கடன்கள் நீங்கலாக, அந்த நிதியிலிருந்து கொடுக்க வேண்டிய செலவுகளேவிட இதற்கு முதல் இடம் கொடுக்க வேண்டும் என்று கட்டளை யிடலாம். 150. பஞ்சாயத்து தலைவர் அல்லது துணைத் தலைவரை நீக்குதல் (1) தலைவர் அல்லது துணேத்தலேவர் இச்சட்டத்தின் விதிகளேயும், இதர சட்டங்களேயும் சட்டபூர்வமான உத்தரவு களேயும் நிறைவேற்ருமல் தம் இஷ்டம்போல் விட்டு விட்டர் லும்,மறுத்தாலும், அவற்றிற்கு கீழ்ப்படியாவிட்டாலும் அல்லது தம்முடைய அதிகாரங்களே துஷ்பிரயோகம் செய்தாலும் இன்ஸ்பெக்டர் அவ்வாறு கருதினால், தலேவர் அல்லது துணேத் தலைவருக்கு அவருடைய தவறை எடுத்துக் காட்டி, குறிப்பிட்ட ஒரு தேதிக்குள் விளக்கம் தருமாறு, நோட்டீஸ் அனுப்பிக் கேட்க வேண்டும். (2) குறிப்பிட்ட தேதிக்குள் மேற்படி விளக்கம் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்து, அது திருப்திகரமாக இருப்பதாக இன்ஸ்பெக்டர் கருதினுல், மேற்கொண்டு எவ்வித நடவடிக் கையும் எடுக்காமல் விட்டுவிடலாம். குறிப்பிட்ட தேதிக்குள் விளக்கம் வராமலும், திருப்திகரமாக இல்லே என்றும் இன்ஸ் பெக்டர், கருதினால், உட்பிரிவு (1)ல் குறிப்பிட்ட நோட்டி வின் நகல் ஒன்றையும், விளக்கம் கிடைக்கப் பெற்றிருந் தால் அதையும் தலேவர் அல்லது துணைத் தலைவரை பதவி யிலிருந்து நீக்குவவற்காக, பஞ்சாயத்தின் ஆலோசனைக்கு பிரேரணை ஒன்றையும் சேர்த்து சம்பந்தப்பட்ட தாலுகா தாசில்தாருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.