பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223 நீக்குவதற்கான பிரேரணையையும் பரிசீலிக்கப்படுவதற்கு என்று கூட்டப்படும் ஒரு கூட்டத்தை வேறு எந்தக் காரணத் துக்காகவும் ஒத்திப் போடக்கூடாது. (8) இப்பிரிவின்கீழ் கூட்டப்படும் கூட்டம் தொடங்கிய தும் பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கு அரசாங்கம் அனுப்பிய நோட்டீஸ், அதற்கு கிடைத்த விளக்கம், ஆகிய வற்றை ரெவினியூ டிவிஷனல் அதிகாரி பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலுக்கு படித்துக் காட்ட வேண்டும், இவற்றை பிரிசீலிக்கவேதான் இந்தக் கூட்டம் கூட்டப் பட்டுள்ளது என்பதையும் தெரிவிக்க வேண்டும். - (9) இப்பிரிவின்கீழ் நடக்கும் கூட்டத்தில் எவ்வித விவாதமும் செய்யக்கூடாது. (10) நோட்டீஸின் அல்லது விளக்கத்தின் தராதரம் குறித்து, ரெவினியூ டிவிஷனல் அதிகாரி பேசக்கூடாது. ஒட் அளிக்கவும் உரிமை அவருக்கு கிடையாது. (11) அரசாங்கம் அனுப்பிய பிரேரணையை ஏற்றுக் கொண்டு அல்லது நிராகரித்து, பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் செய்யும் தீர்மானம், நடவடிக்கைக் குறிப்புப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு, அதன் நகல், கூட்டம் முடிந்ததும் ரெவினியூ டிவிஷனல் அதிகாரியினல் அரசாங் கத்துக்கு அனுப்பப்பட வேண்டும். - (12) மேற்படி பிரேரணையை பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் ஏற்றுக்கொண்டிருந்தால் ஒரு அறிவிப்பின் மூலம் சந்தர்ப்பத்துக்கேற்ப தலைவர் அல்லது துணைத் தலைவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட வேண்டும். - (13) உட்பிரிவு (12)ன்கீழ் பதவியிலிருந்து விலக்கப் பட்ட யாரும், பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலின் அடுத்த தேர்தல் தேதி அல்லது விலக்கப்பட்ட தேதியிலிருந்து ஒரு வருஷ காலம், இந்த இரண்டில் எது முந்தியதோ அதுவரை தலைவர் அல்லது துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படு வதற்கோ அல்லது வேறு பதவி வகிப்பதற்கோ, தகுதியற்றவர் ஆவார். 152. பஞ்சாயத்து தலைவர் அல்லது துணைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை (1) இந்தப் பிரிவின் பகுதிகளுக்கு உட்பட்டு, பஞ்சா யத்தின் தலைவர் அல்லது துணைத் தலைவர் மீது நம்பிக்கை