பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 (2) உட்பிரிவு (1)ன்கீழ் அறிவிப்பை வெளியிடுமுன் அரசாங்கம் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து யூனியன் கவுன்சி லுக்கு தங்கள் உத்தேசத்துக்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும். அதற்கு பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் விளக்கம் அல்லது ஆட்சேபனை கூறுவதற்கு நியாயமான கால அளவை நிச்சயிக்க வேண்டும். ஆட்சேபணைகள், சமாதானங்கள் ஏதாவது கூறினுல் அவற்றைப் பரிசீலனை செய்ய வேண்டும். - (3) உட்பிரிவு (1)ன்படி பஞ்சாயத்து யூனியன் கவுன் அலேக் கலைப்பதற்கு நிர்ணயிக்கப்பட்ட தேதியில், அதன் தலைவர், துணைத் தலைவர், அங்கத்தினர்கள் யாவரும் "உடனடியாகத் தங்கள் பதவியைக் காலி செய்து விட்ட தாகக் கருதப்படுவார்கள். (4) ஒரு பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் கலைக்கப் பட்டதற்கும், திருத்தி அமைக்கப்பட்டதற்கும் இடையே யுள்ள காலத்தில், பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் தலைவ ருடைய அதிகாரத்தை வகிக்கவும், கடமைகளேச் செய்ய வும் இன்ஸ்பெக்டர் ஒருவரை நியமிக்கலாம்; ஆனால், அப்படி நியமிக்கப்படுபவர், அரசாங்கத்தின் தாசில்தார் அல்லது கமிஷனர் அந்தஸ்துக்கு குறையாத பதவி வகித்து வருகின்ற அரசாங்க உத்தியோகஸ்தராக இருக்க வேண்டும். (5) திருத்தி அமைப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட தேதி யிலிருந்து பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் அங்கத்தினர் கள் பதவி வகிப்பார்கள். அரசாங்கம் நிர்ணயிக்கும் வருஷத் திலும் தேதியன்றும் அவர்களுடைய பதவிக்காலம் முடி வடையும். (6) இப்பிரிவின்கீழ், ஒரு பஞ்சாயத்து யூனியன் கவுன் சில் கலைக்கப்பட்டால், அது மீண்டும் திருத்தியமைக்கப்படும் காலம் வரை அரசாங்கமும், அதன்பிறகு திருத்தியமைக்கப் :பட்ட பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலும் முறையே கலேக்கப் பட்ட தேதியினின்றும் மீண்டும் அமைக்கப்பட்ட தேதியி னின்றும் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸி லுக்கு இருந்த சொத்துக்கள் அனேத்துக்கும் உரிமை பெறுவதோடு பொறுப்புகளுக்கும் உட்பட வேண்டும்.