பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 ஒன்றை நீதிமன்றத்தில் கொண்டுவரக் கூடியதாக இருக்கு மால்ை, அதை பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலுக்கு எதிராகவோ தான் கொண்டுவர வேண்டும். ஆனால், 178-வது பிரிவின்கீழ் கொண்டுவரப்படும் வழக்கு களின் விஷயத்தில், அவ்வாறு பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலுக்கு எதிராக கொண்டு வரவேண்டியதில்லே. 172. தேர்தல் நடவடிக்கையில் தடை உத்தரவுகள் கூடாது 1908-ம் வருடத்திய சிவில் வழக்கு முறைச் சட்டத்தில் [Code of Civil Procedure, 1908) Grotor Gloiróðuoqbā3 போதிலும், அல்லது அப்போது அமுலில் உள்ள வேருெரு சட்டத்தில் என்ன சொல்லியிருப்பினும் வாக்காளர் ஜாபி தாவை தயார் செய்வதற்காகவும், தேர்தல் நடத்துவதற் காகவும் இச்சட்டத்தின்கீழ் தொடரப்பட்டுள்ள அல்லது தொடரப்படப்போகிற எந்த நடவடிக்கையையும் தடுப் பதற்கு எந்த நீதிமன்றமும் நிரந்தரமான அல்லது தற்காலிக மான தடை உத்தரவு கொடுக்கக் கூடாது. அல்லது இடைக் கால உத்தரவு எதுவும் பிறப்பிக்கக் கூடாது. 173. சொத்தின் நஷ்டம், துர்விநியோகம், விரையம் இவற்றிற்கு தலைவர், நிர்வாக அதிகாரி, அங்கத்தினர்கள் பொறுப்பாளிகள் ஆவார்கள், (1) பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன் சிலுக்குச் சொந்தமான அல்லது அதன் பொறுப்பில் உள்ள பணம் அல்லது இதர சொத்துக்கு நஷ்டம், விரையம், துர்விநியோகம் உண்டாக்கப் பட்டிருந்தால் அது, பஞ்சா யத்து தலைவர், நிர்வாக அதிகாரி, அங்கத்தினர் ஒவ் வொருவரும், பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் சேர்மன், கமிஷனர், அங்கத்தினர் ஒவ்வொருவருடைய அசட்டை அல்லது ஒழுங்கீனத்தால் ஏற்பட்டிருந்தால், அதற்கு அவர்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள் ஆவார்கள். இதற்கு ஈடுசெய்ய, பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சில், இன்ஸ்பெக்டருடைய முன் அனுமதி புடன் தகுந்த அதிகாரமுள்ள நீதிமன்றத்தில் சம்பந்தப் பட்டவர் மீது வழக்குத் தொடரலாம். (2) அத்தகைய ஒவ்வொரு வழக்கையும் வழக்கு மூலம் ஏற்பட்ட தேதிக்குப் பிறகு, மூன்று வருஷ காலத்துக்குள் தொடர வேண்டும்.