உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243 174. வரி விதிப்பு முதலியவற்றை குற்றம் சொல்லக் கூடாது. (1) இந்தச் சட்டத்தின் பிரிவுகள் பொருத்தமாக முக் கிய அம்சத்தில் அனுசரிக்கப்பட்டிருக்கும் பகஷத்தில் (a) ஒருவருடைய பெயர், குடி இருப்பு இடம், தொழில் இடம் அல்லது உத்தியோகம் பற்றியாவது, (b) சொத்து அல்லது சாமானின் விவரம் பற்றியாவது, (c) வரிவிதிப்பு செய்யப்பட்டு, கேட்கப்பட்டு அல்லது சாட்டப்பட்டுள்ள தொகை பற்றி எழுத்துப் பிழை அல்லது பிசகு காரணமாக தவறு நேர்ந்திருந்தால், அதுபற்றி குற்றம் சொல்லக்கூடாது. அதல்ை பாதகம் ஏற்படாது. இச்சட் டத்தின்படி செய்யப்படும் எந்த நடவடிக்கைகளும் நடை முறைப் பிசகு காரணமாக, எந்த நீதிமன்றத்தாலும் ரத்து செய்யப்படவோ தள்ளி விடப்படவோ கூடாது. (2) இச்சட்டத்தினுல் ஏற்படும் அதிகாரங்காேக் கொண்டு விதிக்கப்படும் வரி, அல்லது வசூலிக்கப்பட்ட தொகையை திரும்பப் பெறுவதற்காகவும், அதன் காரணமாக ஏற்படும் நஷ்டத்துக்கு ஈடு பெறவும், எந்த நீதிமன்றத் திலும் வழக்குத் தொடரக்கூடாது. ஆணுல், இச்சட்டத்தின் பிரிவுகள் முக்கியாம்சத்திலும், உண்மையிலும் அனுசரிக்கப்பட்டிருக்க வேண்டும். (3) இச்சட்டத்தின் பிரிவுகளும் விதிகளும் முறையாக அனுசரிக்கப்பட்டிருந்தால், பில், நோட்டீஸ், நமூன, சம்மன், டிமாண்ட் நோட்டீஸ், ஜப்தி, வாரண்ட், சாமான் பட்டியல் ஆகியவற்றில் பிழை அல்லது தவறு அல்லது கிரமப்பிசகு இருப்பது காரணமாக, இச்சட்டத்தின்படி செய்யப்பட்ட ஜப்தியாயினும், விற்பனையாயினும் சட்ட விரோதமாக இருப்பதாக கருதப்பட மாட்டாது. அல்லது அதைச் செய்கிற நபர் அத்துமீறி நடந்ததாகக் கருதப்பட iÙ Ti-l-Tff. ஆனால், ஒழுங்கீனமான நடவடிக்கை காரணமாக தமக்கு ஏ ற் ப ட் ட குறிப்பான சேதத்துக்கு பரிகாரம் பெறலாம்.