244 175. பொதுச் சாலைகள், மார்க்கட்டுகள், கிணறுகள், குளங்கள் முதலியவை எல்லோரும் உபயோகிக்கத்தக்கவை .பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் வசமிருக்கிற அல்லது பராமரிக்கப்படுகிற எல்லா சாலைகளும், மார்க்கட்டுகளும், கிணறுகளும், குளங்களும், நீர்த்தேக்கங் களும், கால்வாய்களும் ஜாதி மத பேதமின்றி, எல்லோரும் உபயோகிப்பதற்காகவும் அனுபவிப்பதற்காகவும் இருக்க வேண்டும். 176. கட்டணங்கள் வசூலிப்பதை குத்தகைக்கு விடும் அதிகாரம் ஒரு பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சில், இந்தச் சட்டத்தின்கீழ் அல்லது விதி, துனேவிதி அல்லது கிரமப்படி தனக்குச் சேரவேண்டிய கட்டணங்களே வசூலிக்கும் அதிகாரத்தை தனக்கு தகுதியெனத் தோன்றும் நிபந்த்னேகளின் பேரில், ஒரே சமயத்தில் மூன்று வருஷ்ங் களுக்கு மேற்படாமல், ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு குத்தகைக்கு விட அதிகாரம் உள்ளதாகும். 177. பிரதேச அதிகார சபைகளுக்கு இடையே ஏற்படும் தகராறுகளில் சமரசம் செய்துவைத்தல் (1) ஒரு பஞ்சாயத்துக்கும் அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலுக்கும் இடையேயும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிரதேச அதிகார சபைகளிடையேயும் இந்தச் சட்டத்தில் கண்ட அல்லது வேருெரு சட்டத்தின்கீழ் உள்ள பிரிவுகள் சம்பந்தமாக ஏதாவது தகராறு எழுந்து, சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்குள் அதை சுமுகமாகத் தீர்த்துக்கொள்ள முடியாமற் போனல், அரசாங்கம் அதன் விவரத்தை தெரிந்து கொண்டு, (a) தாங்களே தீர்த்துவைக்க வேண்டும்; அல்லது, (b) அதுபற்றி விசார்னே செய்து, அறிக்கை சமர்ப் பிக்க ஒரு மத்தியஸ்தரிடம் அல்லது ஒரு மத்தியஸ் த போர்டா ரிடம் அல்லது இதற்காகவே அமைக்கப்பட்ட கூட்டுக் கமிட்டியிடம் அனுப்ப வேண்டும். (2) உட்பிரிவு (1), (a) பகுதியில் குறிப்பிட்டுள்ளபடி அரசாங்கத்துக்கு விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/435
Appearance