பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

245 வேண்டும்.அதன்பேரில், அரசாங்கம் தங்களுக்கு தகுதியாகத் தோன்றும் விதத்தில் தகராறுபற்றி முடிவு செய்ய வேண்டும். (3) உட்பிரிவு (1), (a) பகுதியில் அல்லது உட்பிரிவு (2)ன்கீழ் அரசாங்கம் வெளியிடும் முடிவை தங்களுக்குத் தோன்றும் விதத்தில் அவ்வப்போது மாற்றலாம். இந்த உட்பிரிவின்கீழ் செய்யப்பட்டுள்ள எவற்றையாகிலும் மாற்றங்: களுடன் கூடிய மேற்படி முடிவை அரசாங்கம் எப்பொழு தேனும் ரத்து செய்துவிடலாம். அரசாங்கம் செய்யும் முடிவு, மாற்றம், ரத்து ஆகியவை சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சில், பிரதேச அதிகார சபைகளேக் கட்டுப்படுத்துவ தாகும். எந்த நீதிமன்றத்திலும் அதை எதிர்த்து பிராது கொடுக்கக் கூடாது. (4) சம்பந்தப்பட்ட பிரதேச அதிகார சபைகளில் ஒன்று கண்டோன்மென்டாகவோ, துறைமுக அதிகார சபை யாகவோ இருந்தால், இப்பிரிவின்கீழ் அரசாங்கத்துக்குள்ள அதிகாரம் மத்திய அரசாங்கத்தின் சம்மதத்தைப் பெற்றுத் தான் பிரயோகிக்கப்பட வேண்டும், ஏழாவது பகுதி விதிகளும் துணை விதிகளும் தண்டனைகளும் 178. விதிகள் செய்ய அரசாங்கத்துக்கு அதிகாரம் (1) இச்சட்டத்தின் இதர பிரிவுகளின்படி விதிகள் செய்ய அரசாங்கத்துக்கு உள்ள அதிகாரத்துடன்கூட, இச் சட்டத்தின் காரியங்களேப் பொதுவாய் நிறைவேற்றுவதற்கும் விதிகள் செய்ய அரசாங்கத்துக்கு அதிகாரம் உண்டு. (2) முந்திய அதிகாரத்தின் பொதுத் தன்மைக்குப் பாதகமில்லாமல், அரசாங்கம் கீழ்க்கண்ட விஷயமாக விதிகள் செய்யலாம். - (1) பிரிவு 8, உட்பிரிவு 2-ன்கீழ் ஒரு கிராமம் அல்லது பட்டனத்திலிருந்து ஒரு பிரதேசத்தை நீக்குவதில் அல்லது சேர்ப்பதில் அல்லது 5-வது பிரிவின்படி ஒரு பிரதேசத்தை