பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

253 பஞ்சாயத்து யூனியன் கவுன்சில், இன்ஸ்பெக்டருடைய அங்கீ காரத்துடன் அது எந்தக் காரியங்களுக்காக ஏற்படுத்தப் பட்டிருக்கிறதோ, அதை நிறைவேற்றுவதற்காக துணே விதிகள் செய்யலாம். (2) துணே விதிகள் செய்யும்போது, யாராவது அதை மீறி நடந்தால், பதினேந்து ரூபாய்க்கு மே ற் பட த தொகையை அபராதமாக விதிக்கலாம்; அல்லது தொடர்ந்து விதியை மீறி நடந்து கொண்டே இருக்கும் பகூடித்தில், முதல் தடவை மீறப்பட்டதற்காக அபராதம் விதிக்கப்பட்ட் பிறகு, அதிலிருந்து மீறி நடக்கும் ஒவ்வொரு நாளுக்கும் ஐந்து ரூபாய்க்கு மேற்போகாமல், பஞ்சாயத்து அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸில் தீர்மானிக்கக் கூடிய தொகையை அபராதம் விதிக்கத் தக்கபடி விதிகள் செய்யலாம். (3) துணைவிதிகளேச் செய்யும்போது, அனுசரிக்க வேண்டிய நடை முறை குறித்தும், அவற்றை பிரசுரம் செய்வது பற்றியும், அமுலுக்கு வரும் தேதி குறித்தும் விதி கள் செய்ய அரசாங்கத்துக்கு அதிகாரம் உண்டு. தண்டனைகள் 181. ஷெட்பூல்களில் குறிப்பிட்டுள்ள தண்டனைகள் பற்றிய பொது விதிகள் (1) எவராகிலும் - (a) இச்சட்டத்தைச் சேர்ந்த எந்த விதிகளையும் 1 வது ஷெட்பூலின் முதலாவது இரண்டாவது பத்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளவைகளுமான பிரிவுகளில் எதையாவது மீறிலுைம், (b) அப்படி குறிப்பிட்டுள்ள பிரிவுகளின்படி செய்யப் படும் விதி அல்லது உத்தரவை மீறிலுைம், (c) மேலே கூறப்பட்ட பிரிவுகளின்படியோ அல்ல்து அதை அனுசரித்தாவது முறைப்படி தமக்கு பிறப்பிக்கப் படும் உத்தரவின்படி நடக்கத் தவறிலுைம், தொடர்ந்து தவறிக் கொண்டிருந்தாலும் அதற்கு, மேலே சொல்லப் பட்ட ஷெட்பூலின் நான்காவது பத்தியில் கண்டுள்ள தொகை அபராதமாக விதிக்கப்படும்.