259 பஞ்சாயத்து இல்லே என்ருல், பிரத்யேக அதிகாரிக்கு எல்லா வகையான அலுவல்களும் அதாவது வரிவிதிப்பு, வசூல், நிதி சம்பந்தமான வரவு செலவுகள் உள்பட இதர கடமைகள் அலுவல்களே நிறைவேற்ற அதிகாரம் உண்டு. 189. மாற்றப்பட்ட பகுதிக்கு இந்தச் சட்டம் பிரயோகமாகும் (1) இச்சட்டத்தின்படி, மாற்றலாகியுள்ள பிரதேசத்தில் உள்ள, ஒரு பஞ்சாயத்து அபிவிருத்தித் தொகுதியில், பஞ்சா யத்து யூனியன் கவுன்சில் அமைக்கப்பட்ட தேதியிலிருந்து (இப்பிரிவில் இதற்குப் பின்னர், மேற்படி தேதி குறிப்பிடப்பட் டிருக்கிறது) மாற்றப்பட்ட பிரதேசத்தில் இருந்து வந்த '1950-ம் வருவடித்திய திருவாங்கூர்-கொச்சி பஞ்சாயத்துச் சட்ட ம்’ அமுலாவதிலிருந்து ரத்தாகிவிடும். - (2) உட்பிரிவு (1) ல் குறிப்பிட்ட தேதியில் மாற்றலாகி யுள்ள பிரதேசத்தில், அமுலுக்கு வராத சட்டம்பற்றி ஏதேனும் பிரஸ்தாபம் இந்தச் சட்டத்தில் வருமால்ை, அதற்கு அந்தத் தேதியில், அப்பிரதேசத்தில் அமுலில் இருந்த ஏதேனும் பொருத்தமான சட்டம் பற்றிய பிரஸ்தாபம் என்று அர்த்தம் செய்துகொள்ள வேண்டும். - (3) மாற்றலாகியுள்ள பிரதேசத்தில் அமுலில் இருந்து வரும் சட்டத்தில், திருவாங்கூர்-கொச்சி பஞ்சாயத்துச் சட்டம்” பற்றி ஏதேனும் பிரஸ்தாபம் வருமால்ை, அப்பிர தேசம் சம்பந்தமாக இச்சட்டம் பற்றிய பிரஸ்தாபம் என்று அதற்கு அர்த்தம் செய்துகொள்ள வேண்டும். (4) மாற்றலாகியுள்ள பிரதேசத்தில், ஏற்கனவே அங்கிருந்து வந்த சட்டத்தில், எந்த வார்த்தைகளிலாவது, அதிகாரங்களேச் செலுத்தவும் கடமைகளேச் செய்யவும் தகுதி பெற்ற அதிகாரி பற்றி வருகிற பிரஸ்தாபங்களுக்கு, இச் 'சட்டத்தின்கீழ் அதற்கு நிகரான ஒரு அதிகாரி நியமிக்கப் பட்டு, அவரைப்பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டால் எப்படியோ அந்தவிதமாகவே அர்த்தம் செய்துகொள்ள வேண்டும். (3) 1950-ம் வருஷத்திய திருவாங்கூர்-கொச்சி பஞ்சா யத்து சட்டம் (1)-வது உட்பிரிவினுல் ரத்து செய்யப்படு வதன் காரணமாக கீழ்க்கண்டவற்றை பாதிக்காது:
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/450
Appearance