உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 (a) அந்தச் சட்டம் இதற்குமுன் அமுலில் இருந்து வந்ததும், அதன்படி செய்யப்பட்ட அல்லது அனுபவித்த ஒன்றையோ, அல்லது (b) அநதச் சட்டத்தின்படி அடைந்த உரிமை, சலுகை, கடமை அல்லது பொறுப்போ; (c) அந்த சட்டத்துக்கு விரோதமாக செய்த குற்றம் சம்பந்தமாகப் பெற்ற அபராதத் தொகை, பறிமுதல் தொகை அல்லது தண்டனேயும்; அல்லது (d) மேலே சொல்லப்பட்ட காரியங்களுக்காக மேற் கொள்ளப்பட்ட பரிசீலனை, சட்ட நடவடிக்கை அல்லது பரிகாரம் எதுவும் பாதிக்கப்படமாட்டாது. அத்தகைய பரிசீலனை, சட்ட நடவடிக்கை அல்லது பரிகாரம், இச்சட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்தால் எப்படியோ அந்த விதமாகவே செய்யப்படலாம். அல்லது தொடர்ந்து நடத்திக் கொண்டு போகப்படலாம். (6) உட்பிரிவு (5)ல் கண்ட ஏற்பாடுகளுக்கு உட்பட்டு, திருவாங்கூர்-கொச்சி பஞ்சாயத்து சட்டத்தின்கீழ் செய்யப் பட்ட நியமனம், அதிகாரப் பிரிவினே, அறிக்கை, உத்தரவு, கட்டளை, ரெகுலேஷன், நமூன, துனேவிதி, திட்டம், நற்சாட்சிப் பத்திரம், பெர்மிட் அல்லது லேசென்ஸ் ஆகியவை உள்பட எந்தக் காரியமும் மேற்கொண்ட எந்த நடவடிக் கையும், இச்சட்டத்திலுள்ள நிகரான ஏற்பாடுகளின்படி செய்யப்பட்டதாக கருதப்படும். புதிய சட்டப்படி ரத்து செய்யப்பட்டாலொழிய அது தொடர்ந்து அமுலில் இருந்து வரும். (7) மாற்றலாகியுள்ள பிரதேசத்தில் இச்சட்டத்தை பிரயோகப்படுத்துவதற்காக, ஒரு நீதிமன்றமோ அல்லது அதிகார சபையோ தங்கள் முன்னே வரும் எந்த விஷயத் துக்கும் அவசியமாக இருக்கும் விதத்தில், அதன் முக்கிய அம்சம் கெடாமல் திருத்தங்கள் செய்து அர்த்தம் செய்யலாம். விளக்கம் : இப்பிரிவின் காரியத்துக்காக, (a) மாற்றலாகியுள்ள பிரதேசம் என்பது, கன்யா குமரி ஜில்லாவின் ஒரு பகுதியும், செங்கோட்டைத் தாலு காவும் அடங்கிய பஞ்சாயத்து அபிவிருத்தித் தொகுதியாகும்.