பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 வகையில் உர வகைகளைச் சேமித்து வைக்கவும் அது உழவர் களேத் துரண்டும். ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது ஒர் உரக் குழி வைத்திருக்கும்படி அது பார்த்துக் கொள்ளும். புதிய கருவி களே அறிமுகப்படுத்தும். பூச்சிகளிலிருந்தும் நோய்களிலிருந்தும் பயிர்களைக் காக்கும் நடவடிக்கைகளை அது மேற்கொள்ளும், கிராமக் காடுகள், மேய்ச்சல் நிலங்கள், பழத்தோட்டங்கள் ஆகியவற்றின் அபிவிருத்தி வேலைகளே மேற்கொள்ள முடியும். இத்தகைய ஏற்பாடுகளும், கால்நடைப் பராமரிப்பு போன்ற நடவடிக்கைகளும் எல்ல்ா வகையிலும் கிராமம் முன்னேற்றம் பெற வகைசெய்கின்றன. பஞ்சாயத்து பொருளாதாரத்தை வளப்படுத்தும் வகை யில் கூட்டுறவின் வளர்ச்சிக்காகவும் பாடுபடும். கிராம மக்க வளின் தேவைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் கூட்டுறவு முறையில் வேளாண்மையையும், கிராமக் கைத்தொழில்களே யும் மேற்கொள்ள உதவுகிறது. உள்ளூரில் உற்பத்தியான பொருள்களுக்கு நல்ல கிராக்கி ஏற்படுத்தவும் பஞ்சாயத்தால் Glpto-lijip. தெருக்கள், சந்துகள், வடிகால்கள், கரைகள், பாலங்கள், மதகுகள் ஆகியன கட்டுதல், பராமரித்தல், பொதுக்கட்டிடங் களைக் கட்டுதல், கிராமச் சந்தைகள் அமைத்தல், கிராமக் குளங்களைச் சீரமைத்தல், பராமரித்தல் போன்ற சமூக நல வேலைகளுக்குப் பஞ்சாயத்து பொறுப்பு வகிக்கும். கிராமச் சுகாதார நடவடிக்கைகளையும், நோய்த்தடுப்பு வேலைகளேயும் அது மேற்கொள்ளும், கிராமத்தில் கல்வி நன்கு பரவவும் பள்ளிகளில் பெருவாரி யான பிள்ளைகள் வந்து படிக்கச் செய்யவும் அது உதவும். சுகாதார சம்பந்தமான ஆலோசனைகள் சொல்லவும், நூல கங்கள், கிராமத் திரைப்படக் காட்சிச்சாலைகள், சமுதாய நல. நிலையங்கள் போன்ற மனமகிழ் நிலையங்கள் நிறுவவும் அது வகை செய்யும். மனித சக்தி நமது நாட்டில் உள்ள மகத்தான சக்தியாகும். அதைப் பயன் படுத்துவது பஞ்சாய்த்தின் முக்கியமான கடமைகளுள் ஒன்ருகும். திட்ட வேலைகளில் மக்களை மனப் பூர்வமாக ஈடுபட வைப்பதோடு, அவர்களின் நம்பிக்கைக்கும் உரியதாகிறது. உதாரணமாக, பள்ளிக்கூடக் கட்டிடத்தைக் கட்டி விடலாம். ஆனல், பள்ளிகளுக்குப் பிள்ளைகளே அனுப்ப