பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

271 199. விதிகள், அறிவிப்புகள், உத்தரவுகள், முதலியவற்றை சட்டசபைக்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டும் (1) இந்தச் சட்டத்தின் கீழ் இயற்றப்பட்ட எல்லா விதிகளும், அறிவிப்புகளும், உத்தரவுகளும் குறிப்பிட்ட தினத்தில் அமுலுக்கு வரும் என்பதை அரசாங்க கெஜட்டில் வெளியிடப்படும். (2) மேற்படி விதிகளும் உத்தரவுகளும் அறிவிப்புகளும் கூடிய் விரைவில் சட்டசபையும் மேல்சபையும் கூடும் சமயத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மேற்படி சபைகளின் கூட்டம் முடிவுற்றிருந்தால், அடுத்து கூடும்போது சமர்ப் பித்து அங்கீகாரம் பெற வேண்டும். அவற்றில் மேற்படி சபை கள் ஏதேனும் திருத்தங்கள் செய்ய விரும்பினுல் அந்த திருத் தங்களுடனே இவை அமுலாக்கப்படும். - ஆயினும், அவ்வாறு செய்யப்படும் திருத்தங்களோ அல்லது ரத்துகளோ, இந்த விதிகள், அறிவிப்புகள், உத்தரவுகள் செல்லுபடியாகும் தன்மைக்கு பாதகமாக இருக்காது. - ★