உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 வேண்டுமானல், பெற்ருேர்கள் மனம் வைத்தால்தானே முடியும். அந்த மாற்றத்தையும் பஞ்சாயத்தால் ஏற்படுத்த முடியும். 8. பஞ்சாயத்தின் செயல்முறைகளை இணைத்தல் இப்புதிய அமைப்பில் பஞ்சாயத்து என்பது வட்டாரம் அல்லது மாவட்ட அளவில் உள்ள உ ய ர் மன்றங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கும். பஞ்சாயத்து யூனியன் கவுன்வில், மாவட்ட அபிவிருத்தி மன்றம் எனப்படும். அமைப் புகள் பஞ்சாயத்துக்களிலிருந்து மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டோரைக் கொண்டு அமைக்கப்படும். நாட்டின் நிர்மாண வேலைகளையும், பஞ்சாயத்தின் இதர நடவடிக்கைகளையும் கவனித்து வருவதோடு அவற்றை இணைக் கவும் செய்கின்றன். அத்துடன் பஞ்சாயத்திற்குத் தொழில் துட்ப உதவியும், அதன் உறுப்பினர்களுக்குப் பயிற்சியும் அளிக்கும். - 9. வருமான ஆதாரங்கள் மேலே குறிக்கப்பெற்ற நடவடிக்கைகள் கிராமப் பஞ்சா யத்தில் கிட்ைக்கும் நிதி ஆதாரங்களைப் பொறுத்த அளவி லேயே மேற்கொள்ளப்படும், அதே நேரத்தில் மாநில அரசாங் கமும் உரிய பங்கை நிச்சயமாகத் தரும். ஆனால், அவை மட்டும் போதா, அதன் நடவடிக்கைளுக்கு உரிய நிதியைப் பெற நிலையான ஏற்பாட்டைச் செய்தாக வேண்டும். உதார ணமாக, விற்பனைக்காக மீன்களை வளர்த்தல், வருவாய் தரக் கூடிய பழத் தோட்டங்களை வைத்துப் பாதுகாத்தல், ஆகிய வற்றை மேற்கொள்ளலாம். இதல்லாமல், பஞ்சாயத்து அதன் திட்டங்களுக்கு உரிய நிதிக்காக அநேக வகைகளில் வரி வசூலிக் கவும், மாநில அரசாங்கங்கள் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. அவை வீட்டு வரி, தொழில் வரி, வாணிப வரி, வாகன வரி, சொத்து மாற்ற வரி, யாத்திரை வரி, குடிநீர் வரி, பொழுதுபோக்கு வ்ரி, கால்நட்ை வரி போன்ற சில வரிக ளாகும். அவற்றுடன் ரெவின்யூ நிலங்களுக்கும் செஸ் வரி, கால்நடைக் கொட்டகை, சந்தை, பொது இடம், மீன்பிடி குளம், மேய்ச்சல் நிலம் ஆகியவற்றை உபயோகிக்க வசூலிக்கப் படும் கட்டணம் ஆகிய நிதி வசதிகளும் உண்டு. 10. கிராம சேவக் பயிற்சி பஞ்சாயத்து அதற்கு உரிய பொறுப்புகளைச் செம்மையாக நிறைவேற்றுவதற்கு நன்கு பயிற்சி பெற்ற ஆட்கள் தேவைப்