பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1958-ஆம் ஆண்டு சென்னை, மாவட்ட அபிவிருத்தி மன்றச் சட்டம் (1958-ஆம் ஆண்டு சென்னைச் சட்டம் 18) [The Madras District Development Council's Act]. சென்னே ராஜ்யத்தில் மாவட்ட அபிவிருத்தி மன்றங் களே அமைப்பதற்காக வகை செய்வது பொருத்தமாயுள்ள படியால், - இந்தியக் குடியரசின் ஒன்பதாம் ஆண்டில் பின்வருமாறு சட்டம் இயற்றப்படுவதாக : 1. சுருக்கமான பெயர், அமுலும், தொடக்கமும் (1) இந்தச் சட்டம், 1958-ம் ஆண்டு. சென்னை, மாவட்ட அபிவிருத்தி மன்றச் சட்டம் என்று வழங்கப்படும். (2) இது தமிழ்நாடு (சென்னை ராஜ்யம்) முழுவதற்கும் பயன்படும். (3) அரசாங்கத்தார் அறிக்கை வெளியிட்டு, அதன் மூலம் நிச்சயிக்கக்கூடிய தேதியில் இந்தச் சட்டம் அமுலுக்கு வரத் தொடங்கும். 2. விளக்கம் இந்தச் சட்டத்திலே, சந்தர்ப்பம் வேறு பொருள் குறித் தாலன்றி 1) மாவட்டம்’ என்பது, 3-வது பிரிவின் (1) உட் பிரிவில் குறிப்பிட்டுள்ள ரெவினியு மாவட்டம் என்ருவது, அந்தப் பிரிவின் (2) உட் பிரிவின்கீழ் மாவட்டமாக அமைக் கப்பட்டு, அதே பிரிவின் (3) உட் பிரிவின்கீழ் வெளியிடப் பட்ட எவையேனும் அறிவிப்புகளில்ை மாற்றப்பட்டுள்ள பிரதேச விஸ்தீரணம் என்பதைக் குறிக்கும் : (2) அரசாங்கம்’ என்பது, ராஜ்ய அரசாங்கம் :