உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/478

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 (b) எந்தத் தேர்தல் தொகுதி, மேற்படி மாவட்ட மாக, அல்லது அதன் ஒரு பாகமாக அமைந்திருக் கிறதோ, அல்லது எந்தத் தொகுதியில் அந்த மாவட்டம் அல்லது அதன் ஏதேனும் ஒரு பாகம் அடங்கியிருக்கிறதோ, அல்லது சம்பந்தப்படுகிறதோ அந்தத் தொகுதிக்குப் பிரதி நிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, அல்லது அந்த மாவட்டத்தில் வசித்து வருகிற பார்லிமெண்ட் அங்கத்தினர் களும் ராஜ்ய சட்டசபை அங்கத்தினர்களும் ; (c) மேற்படி மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் மன்றங்களின் எல்லா தலைவர்களும் மேற்படி மாவட்டத்தில் ஏதாவது ஒரு பிரதேச விஸ்தீரணத்திற்காக ஒரு பஞ்சாயத்து யூனியன் மன்றம் அமைக்கப்படுகிற வரை யில் அந்தப் பிரதேசத்திலுள்ள பஞ்சாயத்துக்களின் தலேவர் கள் நிர்ணயிக்கப்பட்ட முறையில் தேர்ந்தெடுத்த நபர்; ஆணுல், அந்தப் பிரதேசத்தில் எந்த பஞ்சாயத்துக் கேனும் உரிய வாக்காளர் பட்டியலில் ஒருவருடைய பெயர் கண்டிருந்தாலன்றி அவரை அவ்வாறு தேர்ந்தெடுக்கக் கி.டாது. (d) மேற்படி மாவட்டத்தில், நகரசபைகளின் எல்லா தலைவர்களும்: (e) மேற்படி மாவட்டத்தில் உள்ள மத்திய கூட் டுறவு பாங்கிகளின் தலைவர்கள் : - (f) மேற்படி மாவட்டத்தில் அபிவிருத்தி திட்டங்களே வகுத்து நிறைவேற்றுவதில் சம்பந்தமுள்ளவர்களாய் அரசாங் கத்தாரால் நியமனம் செய்யப்பட்ட கெஜட் பதிவுள்ள அரசாங்க அதிகாரிகள்: மேற்படி மாவட்டத்தில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ரெவினியு மாவட்டப் பகுதிகள் அடங்கியிருந்தால், இந்தச் சட்டத்தின் காரியங்களுக்காக, அந்த மாவட்ட் விஷயமாக, எந்த அதிகாரி மாவட்டக் கலெக்டர் என கருதப் படவேண்டும் என்று அரசாங்கத்தார் அறிவிப்பு வெளியிட்டு அதன் மூலமாக அறிவிக்கலாம். - (2) உட்பிரிவு (1)ல் குறிப்பிட்டுள்ள ம | வ ட்ட க் கலெக்டர், மாவட்ட அபிவிருத்தி மன்றத் தலைவராவர். (3) (a) பார்லிமெண்ட் அங்கத்தினர் எவரும், ராஜ்ய சட்டசபை அங்கத்தினர் எவரும்ஒன்றுக்குமேற்பட்டமாவட்ட அபிவிருத்தி மன்றத்தில் அங்கத்தினராக இருக்கக்கூடாது.