289 (b) தாம் குடியிருக்கும் மாவட்டம் அல்லாத இதர மாவட்டம் அல்லது அதன் ஏதாவது ஒரு பாகம் தேர்தல் தொகுதியாக அமைந்துள்ளது அல்லது அந்த மாவட்டம் அல்லது அதன் ஒரு பாகம் அடங்கியுள்ள அல்லது அதற்குச் சம்பந்தப்படுகிற ஒரு தேர்தல் தொகுதிக்குப் பிரதிநிதியா யிருப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பார்விமெண்ட் அங்கத்தினர் ஒருவர் அல்லது ராஜ்ய சட்டசபை அங்கத் தினர் ஒருவர் அல்லது ராஜ்ய சட்டசபை அங்கத்தினர் ஒருவர் தாம் எந்த மாவட்டத்தில், மாவட்ட அபிவிருத்தி மன்றத்தின் அங்கத்தினராகச் சேவை செய்ய விரும்புகிருர் என தீர்மானித்து, நிர்ணயிக்கப்படக் கூடிய கால அளவுக் குள் தமது தீர்மானத்தை சம்பந்தப்பட்ட மாவட்டக் கலெக் டருக்கு தெரிவிக்க வேண்டும். .x (4) பார்லிமெண்ட் அங்கத்தினராக அல்லது ராஜ்ய சட்டசபை அங்கத்தினராக அல்லது ஒரு மாவட்டத்தில் பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் தலைவராக அல்லது மத்திய கூட்டுறவுப் பாங்கி ஒன்றின் தலைவராக அல்லது நகர சபையின் தலைவராக இருப்பது அற்றுப் போல்ை, அவர் எந்தத் தேதியிலிருந்து அம்மாதிரி அங்கத்தினராக அல்லது தலைவராக இருப்பது அற்றுப்போனதோ அந்தத் தேதியி லிருந்து அவர் மாவட்ட அபிவிருத்தி மன்றத்தின் அங்கக் தினராக இருப்பதும் அற்றுப்போகும். 5. மாவட்ட அபிவிருத்தி மன்றத்தின் அலுவல்கள் (1) மாவட்ட அபிவிருத்தி மன்றமானது. மேற்படி மாவட்டத்திலுள்ள பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து யூனியன் மன்றங்கள், நகரசபைகள் ஆகியவற்றின் செயல்களுக்குச் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் அந்த மாவட்டத்தின் பொருளாதார அடிப்படைகளின் அபிவிருத்தி, அந்த மாவட்டவாசிகளின் பண்பாட்டினையும், நலனேயும் பேணு வதற்காக அங்கு செயல்பட்டு வரப்படுகிற சேவைகள் ஆகியவற்றிற்குச் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களிலும் அரசாங்கத்திற்கு ஆலோசனை கூற வேண்டும். (2) முக்கியமாக, அடியிற் கண்ட அலுவல்களேச் செய்வது மாவட்ட அபிவிருத்தி மன்றத்தின் கடமை யாகும்; அவையாவன :- . ...’ (a) மேற்படி மாவட்டத்தில், எல்லா ஸ்தல அதிகாரி களாலும், அடியிற்கண்ட அரசாங்க இலாகாக்களின் நிர்வாக ஆதிக்கத்தின்கீழ், அந்த மாவட்டத்தில் இயங்கிவருகிற 蠶一19
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/479
Appearance