உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 படுகிரு.ர்கள். செயலாளர் போன்ற அலுவலர் பயிற்சிக்காக வேண்டுமானல், சிலவகை நிறுவனப் பயிற்சிகள் அளிக்கும்படி செய்யலாம். ஆனல் செயல் மன்றங்களிலும் செயல் துணைக் குழுக்களிலும் ஈடுபடும் ஆயிரக்கணக்கான செயல் வீரர்களுக்கு எப்படிப் பயிற்சியளிப்பது? இந்தப் பெருவாரியானவர்களுக்கு நிறுவனப் பயிற்சியென்பது இயலாத ஒன்ருகும். சமுதாய நலவளர்ச்சித் திட்டம், மக்கள் தமக்குள்ளாகவே வயிற்சி பெறும் முறையைப் பரீட்சித்துப் பார்த்திருக்கிறது, குறிப்பாக கிராம சேவக் பயிற்சியைச் சொல்லலாம். பயிற்சி முகாம்களில் பயிற்சி தரப்பட்டது. வெவ்வேறு கிராமங் களிலும் உள்ள முற்போக்கான உழவர்கள் ஒன்று கூடவும், அவரவர் பிரச்னைகளை விவாதித்து, அவற்றைத் தீர்க்கும் வழிவகைகள் காணவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. தத்தம் அனுபவங்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் பயிற்சியாளர் அவர்களுக்குள்ளாகவே பயிற்சி பெற்றுக் கொண்டனர் மேலும், அந்தந்தத் துறைகளுக்குச் சம்பந்தப்பட்ட அதிகாரி களுடன் விவாதித்ததன் மூலமும், அந்தந்தத் துறைகள் நடத்திய விளக்கக் காட்சிகளாலும் பயிற்சி பெற்றனர். முதன் முதலில் வேளாண்மைத் துறையில் பயிற்சி தரும் முகாம்கள் நடத்தப்பட்டன. அந்தத் துறையில் லட்சக் கணக்கான மக்கள் பயிற்சி பெற்றனர். அது தந்த வெற்றி யால், பொதுச் சுகாதாரம், மாதர் நலம், தொழில்கள் முதலிய எல்லாத் துறைகளிலும் முற்போக்கான கிராம வாசிகளுக்குப் பயிற்சி தரப் படிப்படியாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தாம் பெற்ற அறிவை மற்றவர்களுக்காகப் பயன்படுத்தி, உயர் சேவை செய்துவரும் கிராம சேவக்குகள் வட்டார அளவில் உள்ள முகாம்களில் நடக்கும் உயர் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். மற்றவர்களின் அனுபவங்களி லிருந்து கற்று வருவதற்காக, கல்வி நோக்கச் சுற்றுப் பிரயாணங்களுக்கு அவர்கள் அனுப்பப்படுவார்கள். இந்த முறை மாவட்டம், மாநிலம், நாடு என்னும் பரவலான நிலைகளிலும் பின்பற்றப்படும்.