2.94 10. மாவட்ட அபிவிருத்தி மன்றத்தின் பொது அதிகாரங்கள் இந்தச் சட்டத்தின்கீழ் தனக்குள்ள அலுவல்களேச் செவ்வனே நிறைவேற்றும் காரியத்துக்காக, மாவட்ட அபிவிருத்தி மன்றம் ஒவ்வொன்றும், தனது அதிகார வரம் புக்குள் அடியிற் கண்டவற்றைச் செய்யலாம் : (a) அவசியம் எனக் கருதுகிற திட்டங்களே மேற் கொள்ளலாம்; (b) அவசியம் எனக் கருதுகிற புள்ளி விவரங்களேச் சேகரிக்கலாம்; . (c) அந்த மாவட்டத்திலுள்ள நகர சபைகள், பஞ்சா யத்து யூனியன் மன்றங்கள், பஞ்சாயத்துகள் ஆகியவற்றின் செயல்களே ஒழுங்கு படுத்துவது அல்லது அபிவிருத்தி செய்வதுபற்றிய பல்வேறு அம்சங்கள் சம்பந்தப்பட்ட புள்ளி விவரங்களே அல்லது இதர தகவல்களேப் பிரசுரிக்கலாம்; (d) ஏதாவது ஒரு நகரசபை, பஞ்சாயத்து யூனியன் மன்றம், அல்லது பஞ்சாயத்து அதன் நடவடிக்கைகளே ஒழுங்கு படுத்துவது அல்லது அபிவிருத்தி செய்வது சம்பந்த மாக மேற்கொண்ட திட்டங்கள், நிர்ணயிக்கப்படக்கூடிய இதர விஷயங்கள் ஆகியவைபற்றி தனக்கு வேண்டியிருக்கிற தகவலேக் கொடுக்க வேண்டும் என அந்த நகர சபைக்கு பஞ்சாயத்து யூனியன் மன்றத்துக்கு அல்லது பஞ்சாயத்துக்கு உத்தரவிடலாம். 11. ஆண்டு அறிக்கை (1) மாவட்ட அபிவிருத்தி மன்றம் கடந்த ஆண்டில் தனது நடவடிக்கைகளேப்பற்றிய சரியான, பூரணமான, ஆண்டு அறிக்கை ஒன்றை நிர்ணயிக்கப்படக்கூடிய விதத் திலும், ஒவ்வொரு ஆண்டிலும் நிர்ணயிக்கப்படக்கூடிய காலத்திலும் தயாரித்து, அதன் பிரதிகளே அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். (2) அரசாங்கத்தார் அத்தகைய அறிக்கைகளையும் அவற்றின்மேல் தங்களது கருத்துக்களேயும் சட்ட சபை, மேல் சபை முன்பும் வைக்க வேண்டும். 12. விவரக் கணக்குகளும் அறிக்கைகளும் 昂 ஒவ்வொரு மாவட்ட அபிவிருத்தி மன்றமும் தனது செயல் 3sଣାr விஷயமாய் அரசாங்கத்தார் அவ்வப்போது கேட்கக் கூடிய விவரக் கணக்குகளேயும், புள்ளி விவரங்களையும் இதர தகவல்களையும், அரசாங்கத்துக்கு அனுப்பிவைக்கவ்ேண்டும்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/484
Appearance