பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

295 18. எடுத்துக்கொண்ட நடவடிக்கைக்குப் பாதுகாப்பு இந்தச் சட்டத்தை அனுசரித்து, நல்ல எண்ணத்துடன் செய்யப்பட்ட அல்லது செய்ய உத்தேசிக்கப்பட்ட எந்தக் காரியம் விஷயமாகவும் மாவட்ட அபிவிருத்தி மன்றம் ஒன்றின், அல்லகு அதன் நிலக் குழு ஒன்றின் ஒரு அங்கத் தினர் அல்லது அலுவலர் மீது வழக்கு அல்லது இதர சட்ட நடவடிக்கைகள் எதுவும் தொடரக்கூடாது. 14. விதிகள் செய்ய அதிகாரம் (1) இந்தச் சட்டத்தின் காரியங்களே நிறைவேற்று வதற்காக அரசாங்கத்தார் அறிவிப்பு வெளியிட்டு, அதன் மூலமாக விதிகள் செய்யலாம். - (2) முக்கியமாகவும், முந்திய அதிகாரத்தின் பொதுத் தன்மைக்குப் பாதகமில்லாமலும்; அந்த விதிகளில், அடியிற் கண்ட விஷயங்கள் எல்லாவற்றிற்காகவும் அல்லது அவற்றில் எதற்காகவாகிலும் ஏற்பாடு செய்திருக்கலாம்; அந்த விஷயங்களாவன:- - (a) மாவட்ட அபிவிருத்தி மன்ற அங்கத்தினர்களின் அலவன்ஸ்கள், படிகள்; (b) மாவட்ட அபிவிருத்தி மன்றமானது, நகர சபை, பஞ்சாயத்து யூனியன் மன்றம் அல்லது பஞ்சாயத்திட மிருந்து, தகவல் கேட்கக்கூடிய விஷயங்கள்; (c) மாவட்ட அபிவிருத்தி மன்றத்தின் ஆண்டு அறிக் கையை இன்ன விதத்திலும் இன்ன கால அளவுக்குள்ளும் தயாரித்து அரசாங்கத்தாருக்கு அனுப்ப வேண்டும் என்பது; (d) மாவட்ட அபிவிருத்தி மன்றம் இன்ன விவரக் கணக்குகளேயும், தகவலேயும் அரசாங்கத்தாருக்கு அனுப்ப வேண்டும் எனக் கேட்கலாம் என்பது; (e) மாவட்ட அபிவிருத்தி மன்றம் ஒன்றின் அலுவலர் களே வேலைக்கு எடுக்கும் முறையும், அந்த அலுவலர்களின் ஊழிய நிபந்தனைகளும் விதிகளும். (f) மாவட்ட அபிவிருத்தி மன்றக் கூட்டங்களேயும் அந்தக் கூட்டங்களே நடத்துவதுபற்றிய நடைமுறையையும் ஒழுங்குபடுத்துவது; - (g) நிலைக் குழுக்கள் இன்ன முறைப்படியும், இன்ன காரியங்களுக்காகவும் நியமிக்கப்படலாம் என்பதை முறைப் படுத்துவது; - - - a. - (h) நிர்ணயிக்கப்பட வேண்டிய, அல்லது நிர்ணயிக் கப்படக்கூடிய வேறு ஏதாவது ஒரு விஷயம்.