உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 (3) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட எல்லா விதிகளும் அறிவிப்புகளும், அவை செய்யப்பட்ட, பிறகு கூடிய சீக்கிரத்தில் சட்டசபை, மேல் சபைகளின் முன்பும் வ்ைக்கப்பட வேண்டும். மேலும் அவை, சட்டசபை அதே கூட்டத் தொடரிலாவது, ஒன்றுக்கு மேற்பட்ட கூட்டத் தொடர்களிலாவது, நிச்சயமாகச் சபை கூடுகிற பதின்ைகு தினங்களுக்குள் திருத்தங்கள் அல்லது ரத்து மூலமாகச் செய்யக்கூடிய மாறுதல்களுக்கும் உட்பட்டவையாகும். உத்தேசங்கள், காரணங்கள் பற்றிய அறிவிப்பு 1. இப்போதுள்ள ரெவினியு மாவட்டங்களே அபிவிருத்தி மாவட்டங்களாக வரையறுக்க வேண்டும் என்பதும், அரசாங்கத்துறை ஏஜென்ஸிகளுக்கு உள்ளூர் மக்கள், தேர்ந் தெடுத்த பிரதிநிதிகள் ஆலோசனை கூறுவதற்காக, நிலையான ஸ்தாபனமாக அத்தகைய அபிவிருத்தி மாவட்டம் ஒவ்வொன் றுக்காகவும் மாவட்ட அபிவிருத்தி மன்றம் ஒன்று அமைக் கப்படவேண்டும் என்பதும், சென்னே மாநகராட்சி உட்பட, தமிழ்நாடு ஸ்தல நிர்வாக சீர்திருத்தம்பற்றிய வெள்ளே அறிக்கையில் அரசாங்கத்தார் செய்துள்ள தற்காலிக முடிவு களில் ஒன்ருகும். திட்டக் குழு நிறுவியுள்ள திட்ட ஏற்பாட்டுக் குழுவும் ஸ்தல நிர்வாக மூன்று பிரிவு திட்டத்தின் பாகமாக மாவட்ட அளவில் அத்தகைய ஆலோசன சபை ஒன்றை அமைக்க வேண்டும் என சிபாரிசு செய்திருக்கிறது. அபிவிருத்தி மாவட்டங்களேத் தற்காலிகமாக வரையறுப் பதற்கான உத்தேசங்கள் வெள்ளே அறிக்கையில் கண்டிருக் கின்றன. 2. இப்போதிருக்கிற மாவட்ட திட்டக் கழகங்களில் உள்ளவர்களே அநேகமாய் மாவட்ட அபிவிருத்தி மன்றங் களிலும் இருப்பார்கள். மாவட்டத்தில் உத்தேசித்துள்ள பஞ்சாயத்து யூனியன் மன்றங்களின் தலைவர்களும் இந்தச் சபைகளில் இருப்பார்கள். இப்போது மாவட்டங்களில், செயல்பட்டு வருகிற மாவட்ட திட்டக் கழகங்கள் உட்பட சில ஆலோசனேச் சபைகளே எடுத்துவிட்டு, அவற்றின் அலுவல்களே யெல்லாம் மாவட்ட அபிவிருத்தி மன்றங் களுக்கு மாற்ற உத்தேசித்திருக்கிறது. மாவட்ட அபிவிருத்தி மன்றங்கள் தங்கள் அதிகாரங்களேச் செலுத்துவதிலும் தங்கள் கடமைகளேயும் அலுவல்களேயும் செய்வதிலும் அவைகளுக்கு உதவியாயிருக்க நிலையான குழுக்கள் அமைக்கப்படும்.