பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 மேற்படி கிராமம், அல்லது நகரம் அல்லது பிரதேசத்தின் ஏதாவது ஒரு பகுதியிலுள்ள ஜனத்தொகை பற்றி ஏதேனும் பிரச்னை எழுந்தால், அந்தப் பிரச்னே யை மேற்படி கிராமம், நகரம் அல்லது பிரதேசத்தின், அதற்கு முன்னர் ஜனத் தொகை கணக்கெடுப்பின்போது கண்டறியப்பட்ட ஜனத் தொகையை ஒட்டியே தீர்மானிக்க வேண்டும். 9. கிராமம்-நகரத்தை நீக்குதல் அல்லது சேர்த்தல் - ப. ச. 3. (2) விதிகள் 1. இந்தச் சட்டத்தின் 3 (2) பிரிவின்படி ஒரு கிராமம் அல்லது நகரத்திலிருந்து ஏதாவது ஒர் உள்ளுர் பகுதியை நீக்குதல் அல்லது ஏதாவது ஒரு கிராமம் அல்லது நகரத்தின் உள்ளுர் பகுதியைச் சேர்ப்பதுபற்றி கீழ்க்கண்ட விதிகளில் கூறியுள்ள கோட்பாடுகளே அனுசரிக்க வேண்டும். 2. ஏதாவது ஒரு பிரதேசம், மற்ருெரு கிராமம் அல்லது கிராமத்திலிருந்து நீக்கப்பட்டால் அன்றியும் அதை இன் ைெரு கிராமத்துடன் அல்லது நகரத்துடன் சேர்ப்பது அவசியமானதாகவும், பொருத்தமானதாகவும் இருந்தா லன்றி, அந்தப் பிரதேசத்தைப் பின் சொன்ன கிராமத்துடன் அல்லது நகரத்துடன் இணைக்கக்கூடாது. 3. ஒரு பஞ்சாயத்தாக அமைப்பதற்காக அல்லாமல் அல்லது ஏற்கனவே, ஒரு பஞ்சாயத்திலுள்ள அல்லது ஒரு பஞ்சாயத்தை அமைக்க உத்தேசித்துள்ள மற்ருெரு கிராமம் அல்லது நகரத்துடன் சேர்ப்பதற்காக அல்லாமல் எந்தப் பகுதியையும். ஏதேனும் ஒரு கிராமத்திலிருந்தோ நகரத்தி லிருந்தோ நீக்கப்படக்கூடாது. 4. ஒரு கிராமம் அல்லது நகரத்திலிருந்து எந்தப் பகுதி யையும் நீக்கவும் கூடாது. அல்லது அதனுடன் சேர்க்கவும் கூடாது. ஆல்ை, அவ்வாறு நீக்கிய பிறகு அல்லது சேர்த்த பிறகு, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகளின் வருமானம், மேற்படி கிராமத்தின் அல்லது நகரத்தின் நிர்வாகத்தைச் சிறந்த முறையில் மேற்கொள்வதற்கு போதுமானதாக இருக்கும் என கிராம அபிவிருத்தி கமிஷனர் கருதினுல் அவ்வாறு நீக்கலாம் அல்லது சேர்க்கலாம்.