உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 (8) இந்த விதிகளின்கீழ் அதிகாரம் செலுத்துகிற ஜில்லா முன்சீபு, ஸ்பார்டினேட் நீதிபதி அல்லது வேறு அலுவலர் அந்த அதிகாரத்தை அதற்கென பெயர் குறிப் பிட்ட அதிகாரி என்ற முறையில் செலுத்துவதாகவே கருத வேண்டும். சந்தர்ப்பத்திற்கேற்ப அவர் ஒரு முன்சீபு, நீதிபதி அல்லது அரசாங்கத்தின் இதர அலுவலர் என்ற முறையில் அந்த அதிகாரத்தைச் செலுத்துவதாகக் கருதக் சி.டாது. - 2. (1) தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட தேதியி லிருந்து பதினேந்து நாட்களுக்குள் தேர்தல் மனுவை எடுத்துக்கொள்ள வேண்டும். விளக்கம்.-மேற்கூறிய பதினேந்து நாள் கால அளவில் கடைசி நாளன்று தேர்தல் நீதிமன்ற அலுவலகம் மூடியிருந் தால், அந்த நீதிமன்றம் அதற்குப்பின் திறந்திருக்கிற அடுத்த நாளன்றே தேர்தல் மனுவைக் கொடுக்கலாம். (2) மனுதார், தம் வாதத்துக்கு ஆதரவாக நம்பி யுள்ள முக்கிய விஷயங்கள், எதிர் நபர் கடைப்பிடித்ததாக அவர் கூறும் லஞ்சப் பழக்கங்கள் ஆகியவை அந்த மனுவில் கண்டிருக்க வேண்டும். அவசியமால்ை, அந்த மனுவைப் பல பாராக்களாகப் பிரித்து வரிசை எண் கெர்டுக்க் வேண்டும். அதில் மனுதார் கையொப்பமிட வேண்டும். 1908ஆம் ஆண்டு சிவில் வழக்கு முறைச் சட்டத்தில் (Code of Civil Procedure 1908) வாதப் பத்திரத்தை உறுதி கூறுவ தற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள முறையிலேயே இந்த மனுவையும் மனுதார் உறுதிப்படுத்த வேண்டும். 3. (1) மனுவில் புகார் கூறப்பட்டுள்ள ஒழுங்கீனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றுக்குமேற்பட்ட அபேட்சகர் களின் தேர்தல்களேப் பாதிக்குமானல், அவ்வாறு தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள அபேட்சகர்கள், அனேவரையும் மனுதார் தமது மனுவில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்க வேண்டும். (2) மனுதாரர் விரும்பினால், சந்தர்ப்பத்துக்கேற்ப தேர்ந்தெடுக்கப்பட்ட அபேட்சகர்கள் அனேவரின் அல்லது அவர்களில் யாராவது ஒருவரின் தேர்தலே ஆட்சேபிப்ப தோடு, தாமோ அல்லது வேறு யாராவது ஒரு அபேட்சகரோ கிரமமாகத் தேர்ந்தெடுக்கப்பெற்றிருப்பதாக உரிமை கொண் டர்டலாம். அத்தகைய விஷயத்தில், தேர்தலுக்கு நியமனம் செய்யப்பட்டவர்களாய், தேர்தல் நடைபெறுவதற்கு முன்