11 அதிலிருந்து விலகிக்கொள்ளாத அபேட்சகர்கள் அனே வரையும் தமது மனுவில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்க வேண்டும். 4. (1) மனுவைக் கொடுக்கும் காலத்தில் மனுதார் தேர்தல் நீதிமன்றத்திடம் வழக்குச் செலவுக்காக இருபத் தைந்து ரூபாய் கட்டிவைக்க வேண்டும். விளக்கம்.-தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட அபேட்சகர்களின் தேர்தல் ஆட்சேபிக்கப்பட்டால், அவ் வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு அபேட்சகர் விஷய மாகவும் தனித்தனியே டெபாசிட் கட்ட வேண்டும். (2) துனேவிதி (i)ன் பிரிவுகள் அனுசரிக்கப்படா விட்டால், தேர்தல் நீதிமன்றம் அந்த மனுவை நிராகரிக்க வேண்டும். (8) துணை விதி (i)ன் பிரிவுகள் அனுசரிக்கப்படு வதன்மேல் தேர்தல் நீதிமன்றம் அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். 5. தேர்தல் நீதி மன்றம் கூடிய விரைவில், அந்த மனுவின் பிரதி ஒன்றை, ஒவ்வொரு எதிர் மனுதாருக்கும் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தின் நிர்வாக அதிகாரிக்கும் சேர்ப் பிக்கச் செய்ய வேண்டும். தேர்தல் நீதிமன்றத்திலும் பஞ்சா யத்து அலுவலகத்திலும் உள்ள விளம்பரப் பலகையில் அதன் பிரதி ஒன்றை ஒட்டிவைக்கச் செய்ய வேண்டும். மேற்கொண்டு ஆகும் செலவுகளேக் கொடுப்பதற்காக, தேர்தல் நீதிமன்றம் உத்தரவிடக்கூடிய தொகைக்கு ஜாமீன் களுடன் மனுதார் ஜாமீன் பத்திரம் எழுதிக்கொடுக்க வேண்டும் என மேற்படி நீதிமன்றம் அந்த மனுதாருக்குக் கட்டளே யிடலாம். அவ்வாறு விளம்பரம் செய்த பிறகு பதின்ைகு நாட்களுக்குள் எப்போதாகிலும் வேறு யாராவது ஒரு அபேட்சகர் எதிர் மனுதாரராகச் சேர்க்கப்பட உரிமை யுள்ளவராவர். அவ்விஷயத்தில் தேர்தல் நீதிமன்றம் கேட்கக்கூடிய ஜாமீனக் கட்டிவிட வேண்டும். 6. (1) ஒவ்வொரு தேர்தல் மனுவையும் தேர்தல் நீதி மன்றம் இயன்றவரையில் 1908-ஆம் ஆண்டு சிவில் வழக்கு முறைச் சட்டத்தின்கீழ் வழக்குகளுக்குப் பயன்படுகிற நடை முறையை அனுசரித்தே விசாரணை செய்யவேண்டும்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/498
Appearance