12 ஆல்ை, நீதிமன்றம், தான் விசாரிக்கிற சாட்சிகளின் சாட்சியத்தின் சாராம்சக் குறிப்பை மட்டும் எழுதி வைப்பது போதுமானதாகும். (2) அடியிற்கண்ட விஷயங்கள் சம்பந்தமாக வழக்கு ஒன்றை விசாரணை செய்கையில் 1908-ஆம் ஆண்டு சிவில் வழக்கு முறைச் சட்டத்தின்படி ஒரு நீதிமன்றத்துக்கு உள்ள அதிகாரங்களேயே தேர்தல் நீதிமன்றமும் கொண்டதாகும்: (a) கண்டுபிடித்தலும் பார்வையிடலும்; (b) அாட்சிகளே வரவழைக்கச் செய்தலும் அவா களுக்காகத் தொகை கட்டிவைக்கச் செய்தலும்; (c) தஸ்தாவேஜுகளைக் கொண்டுவரச் செய்தல்; (d) பிரமானத்தின்மீது சாட்சிகளே விசாரித்தல்; (e) பிரமாணத்தின்மீது எடுக்கப்பட்ட சாட்சியத் தைப் பெறுதல்; () சில சாட்சிகளை விசாரிக்கத் தமிஷன்களே நியமித்து அனுப்புதல். மேலும், தேர்தல், நீதி மன்றம் எவருடைய சாட்சியம் முத்கியமானது எனக் கருதுகிறதோ அவரைத் தானகவே வரவழைத்து விசாரிக்கலாம். 7. () தேர்தல் மனு எதுவும் தேர்தல் நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் வாபஸ் வாங்கப்படலாகாது. (2) ஒன்றுக்கு மேற்பட்ட மனுதாரர்கள் இருந்தால், மனுவை வாபஸ் பெறுவதற்கான விண்ணப்பம் எதையும் எல்லா மனுதாரர்களின் சம்மதமில்லாமல் கொடுக்கக்கூடாது. (3) வாபஸ் பெறுவதற்கான மனு கொடுக்கப்பட்டால், அந்த ம்னுவை விசாரிக்கும் தேதியை நிச்சயித்துத் த்ெரிவிக்கும் அறிவிப்பு ஒன்றை அந்த மனுவின் மற்றக் கட்சிக்காரர்கள் அனைவருக்கும் கொடுக்க வேண்டும்; மேலும் அதை 5-வது விதியில் குறிப்பிட்டுள்ள முறையில் விளம்பரப் படுத்த வேண்டும். w (4) அந்த மனு, வேறு பரஸ்பர உடன்படிக்கையை அல்ல்து பணம் கொடுப்பது போன்ற காரணத்துக்காக கொடுக்கப்பட்டிருக்கின்றது என தேர்தல் நீதிமன்றம் கருதி, அதை அனுமதிக்கக் கூடாது என அபிப்பிராயப்பட்டால், வாபஸ் பெறுவதற்கான மனு அனுமதிக்கப்படமாட்டாது.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/499
Appearance