14 2. ஒரு பஞ்சாயத்தில் இருக்க வேண்டிய அங்கத் தினர்களின் எண்ணிக்கை எவ்வளவு ? கிராமப் பஞ்சாய்த்தானுலும், பட்டணப் பஞ்சாயத் தாளுலும் அதன் ஜனத்தொகைக்குத் தகுந்த விகிதாசாரப் படி, அங்கத்தினர்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும். ஆனல், அங்கத்தினர்களின் எண்ணிக்கை குறைந்த அளவு 5; அதிக அளவு 15-க்கு மேற் போகக் கூடாது. 3. அங்கத்தினர்களில் எத்தனை பேர் தேர்ந்தெடுக் கப்பட்டவர்கள்? பஞ்சாயத்தின் எல்லா அங்கத்தினர்களுமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான். 4. அங்கத்தினர்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட , கூட்டு அங்கத்தினர் (Co-opted) எத்தனே பேர் ? ஒவ்வொரு பஞ்சாயத்திலும் ஒரு பெண் அங்கத்தினர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அப்படி தேர்ந்தெடுக்கப் படாவிடில், ஒரு பெண் அங்கத்தினரை கூட்டு அங்கத்தினராக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 5. அரசாங்கத்தால் அங்கத்தினர்களே நியமனம் செய்யப்படுவது உண்டா? அரசாங்கம், அங்கத்தினர்களை நியமனம் செய்வதற்கு பஞ்சாயத்துச் சட்டத்தில் இடமில்லை. 6. அங்கத்தினர்களை தேர்ந்தெடுப்பது எப்படி? ரகசிய வாக்கெடுப்பு மூலமா? அல்லது பகிரங்க வாக்கெடுப்பு மூலமா? பஞ்சாயத்துச் சட்டம், 14-வது பிரிவுப்படி, அரசாங்கம் வெளியிடும் விதிகளின்படி அங்கத்தினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ரகசிய வாக்கெடுப்பின் மூலமாகத்தான் தேர்தல் நடைபெறும்._1 தேர்தல் விதிகள்” என்ற தனிப்பிரிவு ஒன்று உள்ள்து. அதில் முழு விவரம் காணலாம்.) 7. ஜனத் தொகையை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் நடைபெறுமா ? வயது வந்தவர்களின் வாக்கு உரிமையின் பேரில் தேர்தல் நடைபெறும். சட்டசபைத் தொகுதியின் வாக்காளர் பட்டி யலில் பெயர் உள்ள எல்லோருமே வாக்கு உரிமை அளிக்கத் தகுதியானவர்கள்தான்.
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/51
Appearance