உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 நலனுக்கு உகந்ததல்ல என அவர் கருதில்ை, அத்தகைய உறுதிமொழி ஒன்றை அவர் எழுதிக் கொடுக்க வேண்டும். அதன்பின், மேற்படி பஞ்சாயத்து கேட்டுக்கொண்டால், அந்த விஷயத்தை அவர் ரெவின்யு டிவிஷனல் அதிகாரியின் அல்லது அவர் அதிகாரம் அளித்துள்ள யாராவது ஒரு அலுவலரின் ஆலோசனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன்பின் அந்த ரெவின்யு டிவிஷனல் அதிகாரியின் அல்லது அலுவலரின் தீர்ப்பு முடிவானது. 17. பஞ்சாயத்து நடவடிக்ை ககள் [ւ. տ. 51. (1)] விதிகள் 1. ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் ஒரு காரியாலயம் இருக்க வேண்டும். ஏற்பாடு செய்கிற நாட்களில் அல்லது காலங்களில் அவ்விடத்தில் மாதத்துக்கு ஒரு முறையேனும் சபை கூட வேண்டும். மற்ற காலங்களிலும், பஞ்சாயத்து தலைவர் கூட்டும்போதெல்லாம் சபை கூட வேண்டும். 2. பஞ்சாயத்து விடுமுறை நாளில் கூட்டம் எதுவும் நடத்தக்கூடாது. 3. (1) கூட்டம் கூட வேண்டிய நாள், நேரம், அங்கே நடைபெற இருக்கும் அலுவல்கள் ஆகியவைபற்றிய அறிவிப்பு ஒன்று, கூட்டம் நடைபெறும் தேதிக்கு மூன்று நாட்கள் முன்னதாகவே கொடுத்திருந்தாலொழிய கூட்டம் எதையும் நடத்தக்கூடாது. - (2) அவசர விஷயங்களில், துனே விதி (1)ல் குறித் துள்ளதைவிட குறைந்த கால அறிவிப்புக் கொடுத்து ஒரு கூட்டத்தைத் தலைவர் கூட்டலாம். - - 4. (1) அப்போது பஞ்சாயத்திலுள்ள அங்கத்தினர் களில் மூன்றில் ஒரு பங்குக்குக் குறையாதவர்கள் எழுதிக் கேட்டுக்கொள்வதன்மேல், பஞ்சாயத்துக் கூட்டம் ஒன்றைத் தலைவர் கூட்ட வேண்டும். அந்தக் கூட்டம் எப்பொழுது நடக்க வேண்டும், எதற்காக நடக்க வேண்டும் என்ற தகவல் அந்தக் கோரிக்கையில் அடங்கியிருக்க வேண்டும். அந்தத் தினம் பஞ்சாயத்து விடுமுறை நாளாக இருக்கக் கூடாது. இக் கோரிக்கையைப் பஞ்சாயத்துத் தலைவரிட்ம்,