உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/511

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 நிர்வாக அதிகாரியிடம், அல்லது அந்த அலுவலகப் பொறுப்பு வகிக்கும் வேறு யாராவது ஒரு நபரிடம் அந்தக் கூட்டத் தேதிக்குக் குறைந்தது பத்து நாட்கள் முன்னதாக, பஞ்சாயத்து அலுவலகத்தில் அலுவல் நேரத்தில் சேர்ப்பிக்க வேண்டும். - (2) கோரிக்கை சேர்ப்பிக்கப்பட்டதிலிருந்து நாற்பத் தெட்டு மணி நேரத்துக்குள், தலைவர் அதில் குறித்துள்ள தேதியன்று அல்லது அதன்பின் மூன்று நாட்களுக்குள் கூட்டம் கூட்டத் தவறில்ை, அந்த கோரிக்கை அனுப்பிய அங்கத்தினர்கள் அந்தப் பஞ்சாயத்தின் இதர அங்கத்தினர் களுக்கு 3-வது விதியின் (1) துணே விதியில் கண்டுள்ள அறி விப்பு ஒன்றைக்கொடுத்து அந்தக் கூட்டத்தைக் கூட்டலாம். (8) துணை விதிகள் (1) அல்லது (2)ன்படி فاته எதுவும் பஞ்சாயத்து அலுவலகம் அமைந்திராத வேறு எந்த இடத்திலும் கூட்டப்படலாகாது. - 5. பஞ்சாயத்துக் கூட்டங்களில் பொதுமக்கள் தாராள் மாக வந்திருக்கலாம். ஆனால், தலைமை வகிக்கும் அங்கத் தினர், குறிப்பிட்ட ஏதாவது ஒரு விஷயத்தில், பொதுவாகப் பொதுமக்கள் அனைவரும் ஆல்லது குறிப்பிட்ட யாராவது ஒரு நபர் அங்கிருந்து வெளியேற வேண்டுமெனக் கட்ட8ள் யிடலாம். 6. ஒரு கூட்டத்தில், பஞ்சாயத்தின்முன் வருகிற சகல விஷயங்களும் அந்தக் கூட்டத்துக்கு வந்திருந்து வாக்களிக் கிற அங்கத்தினர்களில் பெரும்பான்மையோரால் முடிவு செய்யப்பட வேண்டும். சாதக பாதக வாக்குகள் சமமாகப் பிரிந்தால், தலைமை வகிக்கும் அங்கத்தினருக்கு, முடிவு செய்யும் இரண்டாவது வாக்கு உண்டு. அவர் அதைப் பயன்படுத்த வேண்டும், எந்த தீர்மானமேனும் ஒருமன தாக நிறைவேருவிட்டால், அதற்குச் சாதகமாகவும் பாதக மாகவும் வாக்களித்த அங்கத்தினர்களின் பெயர்களே எழுதி வைக்க வேண்டும். -- 7. பஞ்சாயத்துக் கூட்டம் ஒன்றுக்கு, அப்போது பஞ் சாயத்திலுள்ள அங்கத்தினர்களில் மூன்றில் ஒரு பங்குக்குக் குறையாதவர்கள் வந்திருந்தாலொழிய, அந்தக்கூட்டத்தை நடத்தககூடாது.