25 8. கூட்டத்துக்கு நிச்சயித்த நேரத்துக்குப்பின் அரை மணிக்குள், வந்திருக்க வேண்டிய குறைந்த அளவு அங்கத் தினர்கள் வராவிட்டால், கூட்டத்தை ஒத்திப்போட வேண் டும். ஆல்ை, வந்துள்ள அங்கத்தினர்கள் அனேவரும் மேலும் சிறிது நேரம் காத்திருக்க ஒப்புக்கொண்டால் அவ்வாறே செய்யலாம். 9. பஞ்சாயத்தின் எந்த ஒரு தீர்மானமும், அது நிறை வேற்றப்பட்ட மூன்று மாதத்துக்குள் திருத்தப்படவோ, நீக் கப்படவோ கூடாது. ஆனால், அதற்கென ஒரு விசேஷக் கூட்டத்தை நடத்தி, பஞ்சாயத்து, அங்கீகரிக்கப்பட்ட அங் கத்தினர் தொகையில், ஒரு பாதிக்குக் குறையாத அங்கத் தினர்களின் ஆதரவுடன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, முன்னர் செய்த தீர்மானத்தில் திருத்தமோ, நீக்கமோ செய்யலாம். 10. பஞ்சாயத்து நடவடிக்கைகளே ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ நடத்தலாம். ஒவ்வொரு கூட்டத்திலும் நடவடிக்கைக் குறிப்புகளே அதற்கென வைக்கப்பட்டுள்ள தனிப்புத்தகத்தில் எழுதி வைக்க வேண்டும். தலைமை வகித் கும் அங்கத்தினர் அதில் கையொப்பமிட வேண்டும். அவர் இல்லாதபோது, அந்தக்கூட்டத்தில் இருக்கிற வேறு அங் கத்தினர் எவராவது அதில் கையொப்பமிட வேண்டும். சட்டத்தின்கீழ் அந்தப் பஞ்சாயத்துக்கு வரி செலுத்துகிற எவர் வேண்டுமானலும் இந்த நடவடிக்கைக் குறிப்புகளே, பஞ்சாயத்து அலுவலகத்தில், நியாயமான எல்லா நேரத்தி லும், இலவசமாகப் பார்வையிடலாம். 11. பஞ்சாயத்துக் கமிட்டி ஒவ்வொன்றும், தலைவர் கூட்டம் கூட்டும்போதெல்லாம் அலுவல் நடத்துவதற்காகப் பஞ்சாயத்து அலுவலகத்தில் சபை கூடவேண்டும். 3, 6, 7, 8, 10-வது விதிகள், வேண்டிய மாறுதல்களுடன், பஞ்சா யத்துக் கமிட்டி நடவடிக்கைகளுக்குப் பயன்படும். பஞ்சா யத்து, அதன் அங்கத்தினர் அல்லது தலேவர் பற்றிய குறிப் பீடுகளே அவசியமானபோது கமிட்டி, அதன் அங்கத்தினர் அல்லது தலைவர் பற்றிய குறிப்பீடாகக் கொள்ள வேண்டும். 12. பஞ்சாயத்துக் கமிட்டி கூட்டம் ஒவ்வொன்றின் நடவடிக்கைக் குறிப்புப் பிரதி ஒன்றை, கூட்டத் தேதியி லிருந்து மூன்று நாட்களுக்குள் கமிட்டி தலைவர், பஞ்சாயத் துத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். தலைவர் III-3
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/512
Appearance