15 8. ஒரு தொகுதிக்கு வாக்காளர்கள் எவ்வளவு பேர் ? குறைந்த பக்ஷம், அதிக பசும் என்ற எண்ணிக்கை எதுவும் இல்லை. ஒவ்வொரு கிராமத்தையும், பட்டனத் தையும், வார்டுகளாகப் பிரித்து, அந்த வார்டுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அங்கத்தினர்களின் எண்ணிக் கையை கலெக்டர் நிர்ணயிப்பார் ; பஞ்சாயத்துச் சட்டம், 16-வது பிரிவுப்படி, 9. பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்களை வார்டு களாகப் பிரித்து, தேர்தல் நடத்த வேண்டுமா ? ஆம்; அப்படித்தான் நடத்தப்படும். ஒவ்வொரு கிராமத் தையும், பட்டணத்தையும் வார்டுகளாகப் பிரித்து, ஒவ்வொரு வார்டுக்கும் எத்தனை அங்கத்தினர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிக்க, பஞ்சாய்த்துச் சட்டப்படி, இன்ஸ்பெக்டர் அதிகாரம் உடையவர். 10. ஒட் அளிப்பதில் சரியான முறை எது? பஞ்சாயத்து தேர்தல்களில் ரகசிய ஒட் அளிக்கும் முறையே நல்லது. 11. அபேட்சகர்களுக்கு க ட் சி ச் சின்னங்கள் அளிக்கப்பட வேண்டுமா ? சென்னை சட்ட சபை தேர்தலில், அகில இந்திய அல்லது ராஜ்ய கட்சிகளுக்கு வழங்கப்பெற்ற சின்னங்களைத் தவிர்த்து, பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்களுக்கு, 21 சுயேச்சையான சின்னங்களை வழங்குவதாக அரசாங்கம் குறிப்பிட்டிருக்கிறது. 12. அங்கத்தினர்களின் பதவிக்காலம் எவ்வளவு? அங்கத்தினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். பஞ்சாயத்து சட்டம் 17-வது பிரிவுப்படி ; அதிலிருந்து மூன்று மாதங்களை அதிகரிக்கவோ அல்லது கு ைற க் க வோ இன்ஸ்பெக்டருக்கு அதிகாரம் உண்டு. 13. ஹரிஜனங்கள், பிற்பட்ட வகுப்பினர்கள், பெண்கள், கூட்டுறவுச் சங்கங்கள், மற்றும் ஏதாவது ஸ்தாபனங்களுக்கு பஞ்சாயத்து பகுதியில் ஸ்தானங்கள் ஒதுக்கப்பட்டிருக் கின்றனவா ?
பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/52
Appearance